கனா காணும் காலங்கள் தொடரில் மினி விஜய் சேதுபதி என்று பெயரெடுத்த வரும் பிரபலம் – அட, ஆமாப்பா அப்படியே இருக்காரு.

0
2517
bharath
- Advertisement -

சின்னத்திரையின் விஜய் சேதுபதி என்று கனா காணும் காலங்கள் பரத்தை குறிப்பிட்டு வரும் பதவி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் சீரியல்களில் ஒன்று தான் கனா காணும் காலங்கள்’. இந்த சீரியல் என்றென்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. பல்வேறு சீரியல்கள் இன்று சின்னத்திரையில் வந்தாலும் கனா காணும் காலங்கள் சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

-விளம்பரம்-

இது 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பப்பட்ட தொடர். அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பி டாப்பில் இந்த தொடர் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. இந்த இரு தொடர்களும் வெற்றி தொடராக அமைந்தது.

இதையும் பாருங்க : கெட்ட வார்த்தை பாடி தான் உங்க வாழ்க்கைய நடத்தணுமா ? சூப்பர் சிங்கர் பைனலில் அனிருத் பாடலை பாடியதை சுட்டிக்காட்டி ஜேம்ஸ் வசந்தன் வேதனை.

- Advertisement -

கனா காணும் காலங்கள் 2:

அதோடு இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர், நடிகைகள் தொலைக்காட்சிகளிலும், வெள்ளித்திரையிலும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாவது சீசன் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் டிக் டாக் பிரபலங்கள் பலருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

கனா காணும் காலங்கள் பரத்:

அதில் ஒருவர் தான் பரத். இந்த தொடரில் இவர் குணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதுவும் இவர் டீச்சரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தற்போது இவரை பலரும் சின்னத்திரையின் விஜய் சேதுபதி என்று கூறுகிறார்கள். இவர் பார்ப்பதற்கு விஜய் சேதுபதி போல் இருக்கிறார் என்று கூறி வருகிறார்.

-விளம்பரம்-

சின்னத்திரையின் விஜய் சேதுபதி :

அதோடு விஜய் சேதுபதியை புகைப்படத்தையும் இவருடைய புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்கள். இதை பார்த்த பலரும் அப்படித்தான் இருக்கிறது என்றும் டிக் டாக்கில் கூட இவர் நிறைய விஜய் சேதுபதி டயலாக் பேசி இருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகின்றனர். தற்போது இவரை பற்றிய கமெண்ட்ஸ் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி:

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் வெளியாகி வெளியாகி இருக்கும் படம் மாமனிதன். இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement