விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண தம்பதி என பலவிதவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.விஜய் டிவியில் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடரில் புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ராகவேந்திரன்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காற்றுக்கென்ன வேலி சீரியல் மாறன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் அதிலிருந்து விலகியதாக கூறி இருந்தார். இந்த நிலையில் அவர் சமூகவலைதளத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் 15 வருடமாக மீடியா தெருவில் இருக்கிறேன் தொடக்கத்தில் ஹீரோவுக்கு நண்பனாக நடித்தேன். ஆனால் இப்போ வரைக்கும் அப்படியேதான் நடித்துக் கொண்டிருக்கிறேன் யாரும் வாய்ப்பு கொடுக்க தயாராக இல்லை அதற்காக நானும் ஜால்ரா அடிக்க தயாராக இல்லை. இதுவும் எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என்றார்.
இதையும் பாருங்க : வாரிசு படம் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் – இப்போதே விஜய் படம் குறித்து பேசிய ஜெயக்குமாரின் மகன்.
சம்பளம் போதவில்லை :-
இன்னமும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்த விரும்பவில்லை நான் 15 நாட்கள் சூட்டிங் போனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள்தான் சீரியலில் காட்டுகிறார்கள். அதுவும் சில நேரங்களில் செட்பொருளாக இருந்திருக்கிறேன்.சீரியலுக்கு கூப்பிடும்போது நீங்கதான் எல்லாம் என்று சொல்லுவார்கள். ஆனால் போக போக நம் கேரக்டர் என்னவென்று நமக்கே தெரியும். இரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு மாத சம்பளம் 6000 வாங்கினேன். அதை வைத்து எப்படி என் குடும்பத்தை நடத்துவது பின் ஒரு மாதத்துக்கு 3500 ரூபாய் தான் என்னுடைய சம்பளம்.
தண்ணீர் கேன் போடும் புலி :-
பிச்சைக்காரன் கூட என்னை விட அதிகமாக சம்பாதிப்பான் யூட்யூபில் பலர் கெட்ட வார்த்தை பேசி பிரபலமாக இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை சப்போட்டிங் ரோலில் நடிப்பவர்கள் ரொம்ப பாவமே. சம்பளம் கிடையாது நல்ல கேரக்டரும் கிடையாது நிம்மதி இருக்காது பலரின் குரல்களை தான் சொல்கிறேன். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்த இவர், தண்ணீர் கேன் போடும் வேலையை செய்து கொண்டிருப்பதாக கூறியிருந்தார். சினிமா என்னை வாழ வைக்கும் என்று நினைத்தேன், ஆனால் அதை நம்பி என் குடும்பத்தை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்காகவும் குடும்பத்தை காப்பாற்றவும் வேலைக்கு செல்கிறேன் என்று கூறியிருந்தார்
புலியின் ஓரு தலைராகம் தோல்வி :-
இந்நிலையில் ராகவேந்திரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒருதலைக்காதல் தோல்வி என்பது போல் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராகவேந்திரன் குறிப்பிட்டிருப்பதாவது, “ , “ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடப்பும் டேமேஜ் , நல்லா இருமா என்னா கொடுமைடா” என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி “GET WELL SOON” என கமெண்ட் செய்து வருகின்றனர்.
சின்னதிரையின் தற்போதைய நிலை :-
சின்னத்திரை சீரியல்களில் மாற்றங்கள் நிகழ்வது இயல்புதான். சீரியலின் முக்கிய கதாபாத்திரங்களான கதாநாயகன் கதாநாயகி மற்றும் வில்லன் உட்பட சீரியலில் தொடர்ந்த வரும் துணை கதாபாத்திரங்களும் அவ்வப்போது மாற்றத்திற்கு உள்ளாவது. சீரியல் கதைகளும் செட்டாகவில்லை என்றாலும் ரசிகர்கள் விரும்பவில்லை என்றாலோ திரைக்கதை ஆசிரியரையும் டைரக்டர் மாற்றிய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளனர்.