வலிமை படத்தை விமர்சித்ததோடு அஜித்தின் உருவத்தையும் கேலி செய்த ப்ளூ சட்டை மாறனை கனா காணும் சீரியல் நடிகர் எச்சரித்து உள்ளார். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும் ,கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர்தான் ‘ப்ளூ சட்டை மாறன்’ இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் உள்பட யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து வருவார். இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள்.
இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த 24 ஆம் தேதி வெளியான அஜித்தின் ‘வலிமை’ படத்தை விமர்சனம் செய்து இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார் இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார்.
3 வருடம் கழித்து வெளியான வலிமை :
இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து உள்ளார் மற்றும் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்களின் 3 வருட காத்திருப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்து இருந்தாலும் ஜென்ரல் ஆடியன்ஸை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை.
உருவக் கேலி செய்யும் ப்ளூ சட்டை :
இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கும் விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தை உருவக்கேலி செய்து இருந்தார். இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் இவர் இந்த படத்தில் அஜித் ஷேவிங் எல்லாம் செய்துவிட்டு பஜன் லால் சேட் போல இருக்கிறார் என்றும், மூஞ்சில் தொப்பையை வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடவே கஷ்டப்படுகிறார் என்றும் விமர்சனம் செய்து இருந்தார்.
தொடர்ந்து கேலி செய்யும் மாறன் :
இவரது இந்த விமர்சனத்தால் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேரு பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். அதிலும் தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ அஜித் ரசிக நடிகர்கள் இவரது கருத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். சமீபத்தில் கூட சார்பட்டா நடிகரும் அஜித்தின் ரசிகருமான ஜான் கொக்கேன் இவருக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அஜித்தை கேலி செய்து வருகின்றனர் மாறன்.
எச்சரித்த ராகவா :
இப்படி ஒரு நிலையில் கனா காணும் காலங்கள் சீரியல் புலி கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் ராகவேந்திரன், என்னங்க சொன்னீங்க அஜித் சாரை. மூஞ்சில தொப்பை விழுந்திருக்கா? சார் என்னை தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என கண்ல பட்டா, உங்க மூஞ்சிக்கு நான் கேரண்டி இல்லை. ஷார்ட் டெம்பர் என்றால் என்ன என்பதை பார்ப்பீங்க.” “இப்படிக்கு தளபதி விஜய் சார் ரசிகன், அஜித் சார் admirer, என் கண்ணுல பட்ட உன் மூஞ்சிக்கு நான் பொறுப்பில்ல. ப்ளூ சட்டை நாய், ஓ** என் கண்ணுல படாதா