இதனால் தான் நான் ரீ – யூனியனுக்கு வரல – கனா காணும் காலங்கள் மோனிஷா.

0
2467
monisha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் இளசுகளை டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் தொடரை 90ஸ் ரசிகர்கள் கண்டிப்பாக மறக்கமுடியாது. 90களில் பிறந்தவர்களுக்கு இந்த தொடர் மிகவும் பிடித்தமான தொடராக இருந்து வந்தது . 2006 ஆம் ஆண்டு பள்ளி செல்லும் சிறுவர்களை டார்கெட் செய்து ஒளிபரப்பான இந்த தொடர் அப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் டிஆர்பியில் டாப்பில் இருந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற தொடர்கள் ஒளிபரப்பானது. கனா காணும் காலங்கள் தொடரைப் போலவே கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மற்றும் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற இரு தொடர்களும் மாபெரும் வெற்றி தொடராக அமைந்திருந்தது.

இதையும் பாருங்க : எளிய மக்களிடம் dynamic திருமணம் என பொய் சொல்லி ஏமாற்றிய சினேகன் ஏன் Dynamic திருமணம் பண்ணல – சினேகனின் பழைய வீடியோவை பகிர்ந்து வெளுத்து வாங்கும் நெட்சன்ங்கள்.

- Advertisement -

இந்த தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் தொலைக்காட்சிகளிலும் வெள்ளித்திரையிலும் நடிகர் நடிகைகளாக திகழ்ந்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனா காணும் காலங்கள் ரீ – யூனியன் நடைபெற்றது. இதில் பெரும்பாலான கானா காணும் காலங்கள் பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இந்த தொடரில் ராகவியாக நடித்து வந்த மோனிஷா வரவில்லை.

மோனிஷா

இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், ‘ரீ யூனியனில் கலந்துகொள்ள என்னையும் அழைத்தார்கள். எனக்கும் கலந்து கொள்ள மிகவும் ஆசையாகத்தான் இருந்தது ஆனால் வருடத்திற்கு இரண்டு முறை சென்னை வருவேன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கடைசியாக சென்னை வந்து திரும்பினேன் அதனால்தான் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement