வெகுவான இளைஞர்களுக்கு சீரியல் என்றால் பிடிக்காது. அவர்களையும் கவர்ந்த சீரியல் தொடர் தான் விஜய் டீவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள். ஒரு காலத்தில் இந்த சீரியல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் ஆகும். இந்த சீரியலில் வந்த அனைத்து கேரக்டர்களுமே அழுத்தமாக பதிந்தவை. இதில் பச்சை என்ற கேரக்டரில் நடித்தவர் மது சூதனன். இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.
இவரது முழு பெயர் வாசுதேவ கிறிஸ் மது சூதனன். இவர் கோயமுத்தூரில் பிறந்து அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர்.

கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது விஜய் டீவியில் ஒரு புதிய சீரியலுக்கான ஆடிசன் நடந்தது. அதில் எதேச்சையாக கலந்து கொண்டவர் நன்றாக பர்பாம் செய்ததால் அவர் தேர்வு செய்யப்பட்டார். அந்த சீரியல் தான் கனா காணும் காலங்கள்.

Advertisement

2006 முதல் 2009 வரை இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இதில் பச்சையப்பன் என்ற பச்சை கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் மக்கள் அனைவருக்கும் ஒரு பிடித்த கேரக்டராக அமைந்தது.
இந்த சீரியல் 2009ல் முடிந்தவுடன் தன்னுடைய படிப்பை தொடர்ந்து கொண்டிருந்தார் பச்சை என்ற மது சூதனன். அதன் பின்னர் அப்போது கலைஞர் டீவியில் வந்த மானாட மயிலாட சீசன் 2வில் பங்கேற்ற பர்பாம் செய்தார் பச்சை. பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஆபீஸ் சீரியலில் நடித்தார்.

அது முடிந்த பின் தான் திரைபடங்களில் வாய்ப்பு வந்தது. கனா காணும் காலங்கால் சீரியலில் நடித்த இர்பான் ஹீரோவாகவும் அருந்ததி ஹீரோயினாகவும் நடித்த சுண்டாட்டம் படத்தில் காட்டி என்கிற வில்லன் கேரக்டரில் நடித்தார் பச்சை. அதன் பின்னர் 2015ல் விஜய் டீவியில் ஒளிபரப்பான மெகர் என்ற டீவி படத்தில் நடித்தார்.
மீண்டும், என் கணவன் என் தோழன் சீரியலில் நடித்த அவர் அதன் பின்னர் ஜீ தமிழ் டீவியில் ஒளிபரப்பான மெல்ல திறந்த கதவு என்ற சீரியலில் ஒரு நல்ல ரோலில் நடித்தார் .தற்போது வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள அடுத்த சீரியல் மற்றும் படங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார் பச்சை என்கிற மது சூதனன்.

Advertisement
Advertisement