நேரு குடும்பத்தை பத்தி படத்தையே எடுத்தவ நான் – சர்ச்சைக்கு உள்ளான தனது கருத்து குறித்து கங்கனா பகிர்ந்த ஆதாரம்.

0
161
- Advertisement -

தேர்தல் பிரச்சாரத்தில் கங்கனா கூறி இருக்கும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. கடந்த சில வாரங்களாக சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மக்களவை இந்த தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதேபோல் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது.

-விளம்பரம்-

தமிழகத்தில் ஏப்ரல் 19 நடைபெற இருக்கிறது. மேலும், வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4 நடைபெறுகிறது.
தற்போது அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. பிரபலங்கள் பலருமே தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

- Advertisement -

பிரச்சாரத்தில் கங்கனா சொன்னது:

இதனால் இவர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். அப்போது அவர் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், எனக்கு ஒரு விஷயத்தை தெளிவு படுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்த போது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்? என்று கேட்டிருக்கிறார். இப்படி இவர் பேசி இருப்பது தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. காரணம், இந்தியாவில் சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு தான்.

கங்கனா கொடுத்த விளக்கம்:

கங்கனா அவர்கள் சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த பலருமே விமர்சனம் தெரிவித்து வருகிறார்கள். பாஜகவை சேர்ந்தவர்கள் கங்கனாவிற்கு ஆதரவு தெரிவித்தாலும் மற்ற கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கங்கனா செய்தி ஒன்று பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் அக்டோபர் 21 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் என்ற அரசை உருவாக்கினார்.

-விளம்பரம்-

சுபாஷ் சந்திரபோஸ் குறித்து சொன்னது:

இரண்டாம் உலகப் போரின்போது சுபாஷ் சந்திரபோஸ் தன்னை பிரதமர், மாநில தலைவர், போர் அமைச்சர் என்றெல்லாம் அறிவித்திருந்தார். மேலும், மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன். இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான இராணி ஜான்சி படைக்கும் அவர் தலைமை தாங்கி இருந்தார். ஜான்சி படை பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர்ப்படை பிரிவு என்றெல்லாம் குறிப்பிட்டு பேசியிருந்தார்.

கங்கனா திரைப்பயணம்:

பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். 2006 தான் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார்.

Advertisement