ஜாமீன் கோரி கனல் கண்ணன் போட்ட மனுவிற்கு காவல்துறை பதிலளிக்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் போட்டிருக்கும் உத்தரவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டராக திகழ்ந்தவர் கனல் கண்ணன். இவர் ஸ்டண்ட் மாஸ்டராக நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல காமெடி காட்சிகளிலும் வந்து கனல் கண்ணன் அசத்தியிருக்கிறார். 1991 ஆம் ஆண்டு சரத்குமார் நடித்த சேரன் பாண்டியன் படத்தின் மூலம் தான் சண்டை பயிற்சி இயக்குனராக கனல் கண்ணன் அறிமுகமாகி இருந்தார்.

அதற்கு பின்பு இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என 4 தலைமுறை நடிகர்களுடன் இவர் சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார். கடைசியாக இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த குருதி பூக்கள் என்ற படத்தில் தான் பணியாற்றியிருந்தார். அதற்கு பின் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் ஊடக பக்கமே கனல் கண்ணன் இல்லாமல் இருந்தார்.

Advertisement

பெரியார் குறித்து கனல் கண்ணன் சொன்னது:

சில வாரமாகவே கனல் கண்ணனின் பேச்சு சோசியல் மீடியாவில் பயங்கர கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்த கூட்டணி முன்னணி பொதுக்கூட்டம் ஒன்றில் கனல்கண்ணன் பேசி இருந்தார். அந்த விழாவில் கனல் கண்ணன்கூறியிருந்தது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் முன்பு கடவுள் இல்லை என்று சொன்னவர் சிலை இருக்கிறது. அந்த சிலையை உடைக்க வேண்டும். அந்த நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என்று பேசி இருக்கிறார். அவர் சொன்னபடி ரங்கநாதர் ஆலயம் முன்பு பெரியார் சிலை தான் இருக்கிறது.

சர்ச்சையை கிளப்பிய கனல் கண்ணன் பேச்சு:

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என கனல் கண்ணன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து இருந்தார்கள். அது மட்டுமில்லாமல் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் எனவும் பலரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார்கள். அதில் சிலர், மாட்டு கோமியத்தை குடிக்கிறவனுக்கு என்னடா தெரியும் பெரியாரின் பகுத்தறிவை பற்றி என்றும் கூறி வருகிறார்கள்.

Advertisement

கைது செய்யப்பட்ட கனல் கண்ணன்:

கலவரத்தை உண்டாக்கும் வகையில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது என்றும் இரு மதத்தினர் இடையில் மோதல் உண்டாக்கும் வகையில் அவர் பேசியுள்ளதாகவும் கூறி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் இரு பிரிவுகளின் கீழ் கனல் கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதி போலீஸ் கைது செய்திருந்தது. பின் கனல் கண்ணன் ஜாமின் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். ஆனால், அது தள்ளுபடி செய்யப்பட்டது.

Advertisement

நீதிபதி போட்ட உத்தரவு:

இதை அடுத்து ஜாமீன் மனு கோரி கனல் கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் பேசவில்லை. கோவிலின் முன் சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை துருதிஸ்டவசமாக என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என்று கூறி இருந்தார். பின் வழக்கை விசாரித்த நீதிபதி, கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின் கனல் கண்ணன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்கும் படி காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு இந்த விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.

Advertisement