ஆஸ்கர் விருது பற்றி கங்கனா ரனாவத் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து தான் திரைப்பட நடிகை ஆனார். தற்போது இவர் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதோடு இவர் இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதை அடுத்து இவர் தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருந்த சந்திரமுகி 2 படத்தில் நடித்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
கங்கனா திரைப்பயணம்:
அதோடு சமீப காலமாக கங்கனா அவர்கள் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கங்கனா நடிப்பில் வெளிவந்த படம் எமர்ஜென்சி. இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தியிருந்த அவசர நிலை பிரகடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திரா காந்தியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.
எமர்ஜென்சி படம்:
இந்த படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இந்த படத்தினுடைய திரைக்கதை, வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதி இருந்தார். அதிக எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் பெரியளவு கை வெற்றி பெறவில்லை. வசூலிலும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தது. இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் சமீபத்தில் தான் வெளியானது.
ரசிகர் சொன்னது:
ஓடிடியில் வெளியானதுக்கு பிறகு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடி இருந்தார். அப்போது ரசிகர் ஒருவர், எமர்ஜென்சி படம் ஆஸ்கருக்கு இந்தியா சார்பாக செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதற்கு கங்கனா, அமெரிக்கா வளரும் நாடுகளை எவ்வாறு கொடுமைப்படுத்துகிறார்கள், அடக்குகிறார்கள்.
கங்கனா சொன்ன விளக்கம்:
அதோடு ஆயுதங்களை திருப்புகிறார்கள் என்று அதன் உண்மையான முகத்தை ஒப்புக்கொள்ள விரும்பாததை எமர்ஜென்சியில் காட்டப்பட்டிருக்கிறது. அவர்களின் வேடிக்கையான ஆஸ்கர் விருதை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நம்மிடம் தேசிய விருதுகள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்பு திறமைக்காக இதுவரை கங்கனா அவர்கள் நான்கு முறை தேசிய விருது வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.