அமெரிக்கர்களை விட இந்தியர்களே மேல், கமலா ஹாரிஸ் குறித்த ட்ரோல்களுக்கு கங்கனா ரணாவத் கண்டனம்

0
246
- Advertisement -

கமலா ஹாரிஸ் குறித்த ட்ரோல்களுக்கு கங்கனா ரணாவத் கண்டனம் தெரிவித்திருக்கும் செய்திதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. அதாவது அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட தயாராக உள்ளார். அதேபோல் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிட இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால் சில காரணங்களால் பைடன் போட்டியிலிருந்து விலகுவதாக கடந்த ஜூலை 21ஆம் தேதி அறிவித்திருந்தார். மேலும், ஜனநாயக கட்சி சார்பில் தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தனது ஆதரவையும் தெவித்திருந்தார். இதனால் அமெரிக்காவில் ஒரு பக்கம் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன. மற்றொரு பக்கம் கமலா ஹாரிஸை ட்ரோல் செய்து சோசியல் மீடியாவில் மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

கமலா ஹாரிஸ் குறித்த மீம்கள்:

இந்த செய்தி தான் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும் பேச்சு பொருளாகியுள்ளது. அதாவது கமலா ஹாரிஸும், முன்னாள் சான் பிரான்சிஸ்கோ மேயர் வில்லி பிரவினும் 1990 காலகட்டத்தில் காதலித்துக் கொண்டிருந்தார்களாம். மேலும் கமலா ஹாரிஸ் 29 வயதாக இருக்கும் போது 60 வயதில் இருக்கும் மேயர் வில்லி பிரவுனுடன் பழகி வந்ததாகவும் குறிப்பிட்டு எக்கச்சக்கமான மீம்களை வைரல் செய்து வருகின்றனர்.

மக்கள் கண்டனம்:

இந்நிலையில் கமலா ஹாரிஸ் பற்றிய இதுபோன்ற வதந்திகளுக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதாவது அரசியல் பழி வாங்குவதற்காக மிகப்பெரிய தலைவரை இப்படி மட்டமாக கேலி செய்வது கண்ணியமான செயல் இல்லை என்று பலரும் இது குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா​ இது குறித்து பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

கங்கனாவின் பதிவு:

அதில், ‘ஜோ பைடன் தனது ஆதரவை கமலா ஹாரிஸ்க்கு தெரிவித்ததால் இப்படிப்பட்ட மீம்கள் வைரல் செய்யப்பட்டு வருகிறது. நான் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கவில்லை. ஆனால் மதிக்கத்தக்க ஒரு பெண் தலைவரை இப்படி கீழ்த்தனமாக பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக இருந்த ஒரு வயதான பெண் அரசியல்வாதியே இந்த அளவிற்கு பாலியல் ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தியர்களே மேல்:

மேலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நவீன நாடுகளில் இது போன்ற கீழ்த்தனமாக நடப்பதை பார்க்கும்போது, அதற்கு நமது இந்தியாவே எவ்வளவு பரவாயில்லை என்று தோன்றுகிறது. இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மிகவும் பிற்போக்குத்தனமானவர்கள்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கங்கனா ரணாவத். பாலிவுட் முன்னணி நடிகையான கங்கனா, கடந்த ஜூன் 2024 முதல் மண்டியில் இருந்து நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement