ஏ எல் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்கை சரித்திரம்.! இவர் தான் ஜெ கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை.!

0
1093
a-l-vijay
- Advertisement -

பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட “நடிகையர் திலகம்” என்ற படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி நல்ல மற்றும் பெற்றது. இந்த நிலையில் மறைந்த முதல்வரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்கபடவுள்ளது. 

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்த படத்தை விப்ரி மீடியா தயாரிக்க உள்ளது என்றும் விப்ரி ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் திரை வாழ்க்கையில் ஆரம்பித்து, அரசியலில் அவர் நுழைவது வரைக்குமான காட்சிகள் தான் இடம்பெறும் என தெரிகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்த படத்திற்கு ‘தலைவி’ என்று பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. .

-விளம்பரம்-
Advertisement