இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் வரும் ஒரு காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் திமுக எம்பி கனிமொழி. சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் “தமிழ் சமூகத்தின் பெண்ணியம்” என்ற தலைப்பில் திமுக நாடாளுமற்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.

அப்போது பேசிய அவர் வரலாற்றல் அரசு பணிகளில் பெண்கள் போன்றப்பட்டார்கள். ஆனால் அதே காலத்தில் தான் விதவை என்றதும் இருந்தது. கண்ணகி தன்னுடைய கணவருக்காக நாட்டை ஆளும் அரசனிடம் கேள்வி கேட்டார். ஆனால் தற்போது எதிர்த்து கேள்வி கேட்பவர்களின் நிலை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். பெண்கள் உடல் மற்றும் உடை சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறும் போது விமர்சிக்கப்படுகிறார்கள். அதோட குடும்ப வன்முறைக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.

Advertisement

இந்த விஷயம் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்தே நடக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறறோம் அதை போல பெண்களுக்கு ஏற்படும் அவமரியாதைகளை பற்றியும் பேச வேண்டும். பெண்களுக்கு மிகச்சாதாரணமாக வன்முறைகள் நடக்கிறது. தன் மீது அன்பு செலுத்தும் ஒருவரிடத்தில் பெண்ணும் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

இவற்றை சொல்லும் வகையில் ஒரு காட்சி 2016ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் காட்டப்பட்டிருக்கும். அதாவது அந்த படத்தின் ஒரு காட்சியில் பெண் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டதாக காட்சி இருக்கும். ஆனால் ஆசிட் வீசியதற்கான காரணம் அவரின் மீது கொண்டா காதல் அன்பு என்று கூறப்படும். அங்கு அந்த ஆனை மறுப்பதற்கான உரிமை அந்த பெண்ணிற்கு கிடையாதது என்பது போன்று இருக்கும். அதுதான் தவறான உதாரணம்.

Advertisement

இப்போதெல்லாம் சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படும் குற்றங்களை நியாயப்படுத்தும் வகையில் படங்கள் வருகின்றன. உடல், கற்பு என்ற வட்டத்திற்குள் நாயகன் பெண்களை அடக்கும் படியாக இருக்கிறது. நாடாளுமடத்தில் விவசாயிகளுக்கு எதிரான மசோதா யாரையும் கேட்காமல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பெண்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்திற்கு மட்டும் அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறி ஏமாற்றுகின்றனர் என்று கூறியிருந்தார் திமுக எம்பி கனிமொழி.

Advertisement
Advertisement