கொரோனா தொற்றால் பலியான இளம் சினிமா நடிகர் – திரையுலகினர் அதிர்ச்சி.

0
1092
manju
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. தமிழ் சினிமாவை போல பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பல்வேறு பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

-விளம்பரம்-

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் துவங்கி வருண் தவான், அக்ஷய் குமார் என்று பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பின்னர் குணமடைந்தனர். இப்படி ஒரு நிலையில் கன்னட இளம் நடிகர் ஒருவர் கொரோனாவால்  மரணமடைந்தது சாண்டல்வுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் சம்யுக்தா 2 மற்றும் கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா போன்ற திரைப்படங்களை தயாரித்து நடித்தவர் 35 வயதான மஞ்சுநாத்.

இதையும் பாருங்க : தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ள சன்னி லியோன் – அதுவும் இந்த காமெடி நடிகர் படத்தில்.

- Advertisement -

சமீபத்தில் ’ஜீரோ பெர்சண்ட் லவ்’ என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வந்தார். இந்த படத்தை வருகிற ஜூன் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தார் மஞ்சுநாத். இப்படி ஒரு நிலையில் மஞ்சுநாத்திற்கு திடீர் உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை உறுதி செய்ததனர்.

இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அவரது உடல் நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்தது சாண்டல்வுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

-விளம்பரம்-
Advertisement