உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பல்வேறு உலக நாடுகள் பாதிப்படைந்துள்ளது. உலகளவில் இந்த நோயால் கடந்த சில மணி நேரத்திற்க்கு முன்பாக வரை 20,64,815 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை உலகளவில் இந்த நோயினால் 1,37,078 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொஞ்சம் மெதுவாக பரவி வந்த இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவ துவங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 424ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 170 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இங்கெல்லாம் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக காணப்படும் 170 மாவட்டங்களை ஹாட்ஸ்பாட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை சிவப்பு மண்டலம் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் 6 மெட்ரோ நகரங்களும் அடங்கும்.

இதையும் பாருங்க : ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை mash up செய்து பாடி வீடியோ வெளியிட்ட பாவனா.

Advertisement

கொரோனாவினால் மக்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்காக மிகவும் கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும், மக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் டாக்டர்களின் சேவையை பாராட்டி நேற்று கன்னட திரையுலகின் பிரபல நடிகையான ராகினி திவேதி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சப்பாத்தி, குருமா தயாரித்து அதனை பார்சல் கட்டி நேரில் சென்று வழங்கினார்.

ராகினி திவேதி வேறு யாரும் இல்லை ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் ராகினி திவேதி. ‘ஆர்யன்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். கன்னடத்தில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். வீர மடகரி’ என்ற படத்தின் மூலம் 2008ல் கன்னட திரையுலகில் அறிமுகமான ராகினி, கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து நடித்துள்ளார். காவேரி பிரச்னையின் போது தமிழகர்களுக்கு தண்ணி தர கூடாது என்று வீடியோ ஒன்றை கூட வெளியிட்டார் என்பது குறிபிடத்தக்கது.

இதையும் பாருங்க : ப்பா, நீயா நானா கோபிநாத்தா இது. கல்லூரி படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

Advertisement

இது ஒரு புறம் இருக்க கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை கொரோனா வைரஸால் இதுவரை 279 பேர் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை பெங்களூரில் தான் அதிக கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூர் நகரில் 38 ஹாட்ஸ்பாட்கள் அமைக்கப்ட்டுள்ளது. மேலும், மக்களுக்கான அத்யாவசிய பொருட்களை அரசு உதவியுடன் வீட்டிற்கே கொன்டு செல்ல வழிவகுப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement