ப்பா, நீயா நானா கோபிநாத்தா இது. கல்லூரி படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
25517
gopinath
- Advertisement -

“நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

-விளம்பரம்-

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதையும் பாருங்க : ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரைசா.

- Advertisement -

மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் தொடர்.

“நீயா நானா” நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற படத்தில் நடிகர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இந்நிலையில் கோபிநாத் அவர்களின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அது நடிகர் கோபிநாத் அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது எடுத்த புகைப்படம். கல்லூரி படிக்கும்போது கோபிநாத் அவர்கள் எப்படி இருக்காருன்னு பாருங்க. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

இதையும் பாருங்க : டேய் போதையில் இருக்கியா? புதிய படம் குறித்து ட்வீட் செய்து பின் டெலீட் செய்த அட்லீ. இதான் அந்த ட்வீட்.

அதிலும் ஒரு சில பேர் உண்மையாலுமே இது நம்ப “நீயா நானா” கோபிநாத்தா!! என்று வியந்தும் கேட்டு வருகிறார்கள். தற்போது கோபிநாத் அவர்கள் ஹீரோவாக படத்தில் நடிக்க உள்ளார். ‘இது எல்லாத்துக்கும் மேல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான கண்ணுபட போகுதய்யா படத்தையும், யுத்தம் என்ற தெலுங்கு படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் கோபிநாத்துடன் இணைந்து சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், மவுரியா, ஆதித்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த கால சூழ்நிலைகளில் பல பெற்றோர்கள் வேலை நெருக்கடி காரணத்தால் தங்களது பிள்ளைகளைக் கவனிப்பது குறைந்து தவறான பாதைக்குச் சென்று விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் பிள்ளைகளை நல்லவர்களா வளர்க்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் இப்படம் ஆமையுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement