மீடியா துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து மீடியா துறையில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் பாவனா பாலகிருஷ்ணனுக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.
சிறு வயதிலையே பரதநாட்டியம் கற்றுக் கொண்ட பாவனா பாலகிருஷ்ணன், மீடியா துறையில் தனது பயணத்தை ஒரு ரேடியோ ஜாக்கியாக துவங்கினார். அதன் பிறகு ‘ராஜ் டிவி’யில் ஒளிபரப்பான ‘பீச் கேர்ள்ஸ்’ என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். இது தான் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய முதல் ஷோவாம். ‘பீச் கேர்ள்ஸ்’ ஷோவிற்கு பிறகு முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘விஜய் டிவி’-யில் என்ட்ரியானார் பாவனா பாலகிருஷ்ணன்.
இதையும் பாருங்க : ஆமாம். நாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரைசா.
‘விஜய் டிவி’-யில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பாவனா பாலகிருஷ்ணன். தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. இந்நிலையில், பாவனா பாலகிருஷ்ணன் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ என்ற பாடலை தமிழிலும், ஒரு ஆங்கில பாடலையும் சேர்த்து பாடி அசத்தியுள்ளார். அவ்வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ எனும் பாடல் இடம்பெற்ற படம் ‘காதல் தேசம்’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் கதிர் இயக்கியிருந்தார்.
இதையும் பாருங்க : ப்பா, நீயா நானா கோபிநாத்தா இது. கல்லூரி படிக்கும் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க.
இதில் வினித், அப்பாஸ், தபு ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். சமீபத்தில், தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி கொண்டிருக்கிறார்.