என் தற்கொலைக்கு காரணம் அவன் தான் – வைரலாகும் நடிகையின் தற்கொலை வீடியோ.

0
5010
Chandini
- Advertisement -

சமீப காலமாகவே சீரியல் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் வழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்து சின்னத்திரை நடிகர்களும் மன அழுத்தத்தினாலும், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளாலும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அந்த வகையில் தற்போது கன்னட சீரியலில் நடித்து வந்த நடிகை சந்தனா அவர்கள் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்போது இந்த சம்பவம் கன்னட சின்னத்திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சந்தனா அவர்கள் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து உள்ளார். இவர் தனது வீட்டில் விஷம் அருந்தி மயங்கி விழுந்தார்.

-விளம்பரம்-

இதையடுத்து அவரது குடும்பத்தினர் சந்தனாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், நடிகை சந்தனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சந்தனா தற்கொலை செய்து கொள்வதை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ பதிவு போலீசுக்கு கிடைத்துள்ளது. அதில் அவர் கூறி இருப்பது, நான் தினேஷ் என்பவரை காதலித்து வந்தேன்.

- Advertisement -

என்னுடைய தற்கொலைக்கு காரணம் அவர் தான் என்று நடிகை சந்தனா கூறியுள்ளார். இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கையில் நடிகை சந்தனா தினேஷ் என்பவரை கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்து உள்ளார். பின் தினேஷூக்கு ரூ.5 லட்சம் வரை பணம் கொடுத்திருப்பது தெரிய வந்து உள்ளது. மேலும், சந்தனாவை திருமணம் செய்து கொள்ளாமல் தினேஷ் ஏமாற்றி வந்து உள்ளார். தினேஷ் நடிகை சந்தனாவின் பணத்தின் மீதே தான் ஆசை வைத்தார்.

இதையறிந்த சந்தனா தன்னை திருமணம் செய்யாமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்த தினேஷால் மனமுடைந்து தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு சந்தனா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தினேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement