வெற்றிமாறன் அலுவலகத்தில் என்னை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள்” – கவிஞர் கண்ணதாசன் மகன் வேதனை. (அட, இந்த கத்தி பட நடிகரா)

0
911
vetrimaran
- Advertisement -

வெற்றிமாறன் அலுவலகத்தில் தனுக்கு நடந்த அவமானம் குறித்து கண்ணதாசன் மகன் கோபி கண்ணதாசன்
அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான கவிஞராகவும், பாடலாசிரியராகவும் இருந்தவர் கண்ணதாசன். இவர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் என எழுதி இருக்கிறார். இவர் பல நாள்இதழ்களின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். மேலும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர் கண்ணதாசன்.

-விளம்பரம்-

இவர் சாகித்திய அகாதமி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். இவரின் மகன் தான் கோபி கண்ணதாசன். இவர் முதல் முதலில் அறிமுகமானது திருமதி செல்வம் சீரியலில் தான். பின் விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக நடித்து இருக்கிறார் கண்ணதாசன். இவர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் கண்ணதாசன் நடித்திருக்கிறார். இப்படி இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : இப்படி பண்ணாதீங்க மாமா, நான் போட மாட்டேன். கேவலமாக திட்டுறாங்க – லைவில் அட்வைஸ் செய்த சினேகன் மனைவி. வைரலாகும் வீடியோ இதோ.

- Advertisement -

கோபி கண்ணதாசன் திரைப்பயணம்:

மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் ஒளிப்பதிவு, சட்டம், அரசியல் என பல துறைகளில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல சேனலுக்கு கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், வெற்றிமாறன் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து கூறியிருப்பது, வெற்றிமாறன் அலுவலகத்தில் எனக்கு ஏன் அப்படி நடந்தது? என்று இன்று வரை தெரியவில்லை. என்னை அழைத்து அவமானப்படுத்தி அனுப்புவோம் என்று திட்டமிட்டு செய்தது மாதிரி தான் எனக்கு இருக்கிறது. என்ன நடந்தது என்றால்,

Kannadasan Son Gopi Kannadasan Kaththi Movie Salary Issue

கோபி கண்ணதாசன் அளித்த பேட்டி:

சார் உங்கள பார்க்கணும் சொல்கிறார் என்று வெற்றிமாறன் ஆபீஸில் இருந்து போன் வரும். வந்ததும் நான் உடனே கிளம்பி போவேன். அதே போல 9 முறை சென்றிருக்கிறேன். அங்க போன உடனே அவரது உதவியாளர்கள் என்னை உள்ளே அனுப்புவார்கள். உள்ளே வெற்றிமரன் என்னை அப்படியே பார்ப்பார். சரி, சொல்லி அனுப்புகிறேன் என்பார். பின் ஒருமுறை போலீஸ் உடை அணிந்து நடித்து காட்டினேன். அவருக்கும் அது பிடித்து இருந்தது. மேலும், என்னிடம் தேதி எல்லாம் சொல்லிவிட்டு தயாராக இருங்கள் என்று வெற்றிமாறன் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் அலுவலகத்தில் நடந்தது:

அதற்கு பிறகு ஒருநாள், சார் உங்கள பார்க்கணும் என்று சொன்னார்கள். அன்று அவர்களே காரும் அனுப்பியிருந்தார்கள். எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது. எப்போதும் நம் காரில் தானே செல்வோம். இப்போது ஏன் கார் அனுப்பியிருக்கிறார்கள்? என யோசித்துக்கொண்டே காரில் ஏறினேன். பின் காரில் ஏறி நேராக சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றது ஒரு அரைப் பக்க வசனத்தை கொடுத்து நடிக்க சொன்னார்கள். உடனடியாக மனப்பாடம் செய்து நடித்ததால் பாதியிலேயே எனக்கு தடங்கல் ஏற்பட்டது. ஒருவித கடுப்புடன் பிரேக் சொல்லிவிட்டு வெற்றிமாறன் கிளம்பிவிட்டார்.

மறக்க முடியாத கசப்பான அனுபவம் :

கொஞ்ச நேரத்தில் புரோடக்சன் மேனேஜர் அழைத்து ஒரு சின்ன தொகையை கையில் கொடுத்து என்னை அனுப்பி இருந்தார். நான் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டேன். இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை. இதில் நான் எதையும் மறைக்கவில்லை, நடந்ததை அப்படியே சொல்லிவிட்டேன். மேலும், 25 படங்களுக்கும் மேலாக சினிமாவில் நான் நடித்து இருக்கிறேன். எந்த படத்திலுமே நான் இப்படி ஒரு அவமானத்தை படவில்லை. இது தான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத கசப்பான அனுபவம் என்று கூறியிருந்தார்.

Advertisement