கத்தி பட சம்பளத்த கேட்டதுக்கு மாஸ்டர்ல நடிக்க விடாம பன்னிட்டாங்க – புலம்பும் கவிஞர் கண்ணதாசனின் மகன். (அட இந்த நடிகர் தானா அவர்)

0
3054
kaththi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கின்றார்கள் அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி காலகட்டத்தில் மூத்த கவிஞராக திகழ்ந்து வந்த பிரபல கவிஞர் கண்ணதாசனின் மகனும் ஒரு நடிகர்தான் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம் கண்ணதாசனுக்கு இரண்டு மனைவிகள் இரண்டு மனைவிகளுக்கும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகள் இருந்தது அதில் ஒரு மகனான கோபி கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக நடித்தவர் கோபி கண்ணதாசன்.

-விளம்பரம்-

மேலும் இவர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘கத்தி’ படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் முதல் முதலில் அறிமுகமானது திருமதி செல்வம் சீரியலில் தான்/ இப்படி ஒரு நிலையில் கத்தி படத்தில் நடித்ததற்கு தனக்கு சம்பள பாக்கி தரப்படவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் கோபி. இது குறித்து கூறியுள்ள அவர் கத்தி படத்தில் சுற்றுச்சூழல் மேலாண்மை வாரியத்தின் தலைவராக நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன் அந்த படத்திற்காக எனக்கு பேசிய பாதி சம்பளத்தை மற்றும் தந்தார்கள் மீதி சம்பளம்இதுநாள் வரை வரவில்லை.

இதையும் பாருங்க : அக்காவின் திருமணத்தில் அப்பாவியான முகத்துடன் தனுஷ் – அறிய புகைப்படம்.

- Advertisement -

தயாரிப்பாளரிடம் கேட்டால் ப்ரொடக்ஷன் மேனேஜர் கிட்ட உங்கள் சம்பளம் முழுசா கொடுத்தாச்சு அங்க போய் வாங்கிக்கோங்கன்னு சொல்றாங்க. சரி, அவரிடம் கேட்டால் ‘என்ன பணத்துக்கு இவ்வளவு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க’என்று கேட்கிறார். நாம் வேலை செய்ததற்கான சம்பளத்தை கேட்டால் பிரச்சனை செய்கிறீர்களா ? என்று கேட்டால் என்ன அர்த்தம். இந்த பிரச்சனைக்கும் நடுவே லைகா தயாரிப்பில் அடுத்த படமான ‘ராங்கி’ படத்திலும் கமிட் ஆகி இருந்தேன். ஆனால், சம்பளத்தை கேட்ட ஆரம்பித்தவுடன் எனக்கு பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. இப்படித்தான் மாஸ்டர் படத்திலும் கமிட் ஆகி இருந்தேன்.

கோபி கண்ணதாசன்

சரியாக அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது .ராங்.கி படத்தின் ஷூட்டிங்கை வெளிநாட்டில் வைத்தார்கள் நானும் வேறு வழியில்லாமல் மாஸ்டர் படத்தை விட்டுவிட்டு ராங்கி படப்பிடிப்புக்கு சென்று விட்டேன். இதேபோலத்தான் இந்தியன் 2 வில் நான் நடிக்கும் வாய்ப்பையும் கெடுத்தார்கள். இந்தப் பிரச்சினை குறித்து தயாரிப்பாளர் நிர்வாகிகளுக்கு புகார் அனுப்பினால் அந்த புகாரை எனக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கண்ணதாசன் மகனான எனக்கே இதான் நிலைமை என்றால் சினிமாவை தேடி கனவோடு வரும் புதுமுக கலைஞர்களின் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார் கோபி.

-விளம்பரம்-
Advertisement