என்னது, கண்ணம்மா மீண்டும் கர்ப்பமா ? வைரலாகும் வீடியோ. (இவங்களும் பைய தூக்கினு களம்பிட போறாங்க)

0
364
barathi
- Advertisement -

சமீபகாலமாகவே மக்களின் பொழுதுபோக்கு நிகழ்வாக சின்னத்திரை தொடர்கள் அமைந்துள்ளது. அதிலும் கொரோனா லாக் டவுனில் இருந்து அனைவரும் சின்னத்திரை சீரியலை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்றுகொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் ரோஷினி ஹரிப்ரியன் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து வெளியேறி இருந்தார். தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தேவி பார்ப்பதற்கு அச்சு அசலாக ரோஷினி போல் இருக்கிறார். மேலும், புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க ஆரம்பத்திலிருந்து சீரியல் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

கோர்ட் உத்தரவு:

தற்போது சீரியலில் பல்வேறு திருப்பங்களும் வந்துகொண்டிருக்கின்றது. இதனிடையே வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் சீரியலில் இருந்து அவருடைய காட்சிகள் மட்டும் காண்பிக்காமல் இருந்தார்கள். தற்போது வெண்பா கதாபாத்திரத்தில் நடித்த பரினா மீண்டும் வில்லியாக சீரியலில் என்றி கொடுத்துவிட்டார். தற்போது கோர்ட்டில் பாரதியும் கண்ணம்மாவும் ஆறு மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட்டில் தீர்ப்பு வழங்கி இருந்தது.

பாரதி வீட்டில் குழந்தைகள்:

இதனால் பாரதி, கண்ணம்மா இருவரும் கண்ணம்மா வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால், பாரதி வேண்டாவெறுப்பாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். மேலும், இவர்கள் இருவருக்குமான குழந்தைகள் இருவருமே பாரதியின் வீட்டில் பாரதியின் தாய், தந்தையருடன் இருக்கிறது. இந்த வாரம் பாரதி கண்ணம்மா இருவரும் தங்களின் கல்யாண நாளுக்கு துணி எடுத்தார்கள்.

-விளம்பரம்-

கண்ணம்மா கர்ப்பமா? :

இந்த நிலையில் கண்ணம்மா கர்ப்பமாக இருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. எப்போதுமே பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தங்களுடைய வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் கண்ணம்மா மற்றும் அவரது மகள், ஹேமா இருவரும் நடனமாடி பாடிய ஒரு வீடியோவை வினுஷா தேவி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவில் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போன்று தெரிகிறது.

குழப்பத்தில் ரசிகர்கள்:

இதேபோல் வெளியான மற்றொரு வீடியோவில் கண்ணம்மா கர்பமாக இருக்கும் வயிற்றுக்கு லட்சுமியும் ஹேமாவும் மாறி மாறி முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறாரா? என்று கேட்டு வருகிறார்கள். ஒரு வேளை இது கண்ணம்மாவின் கனவா? இல்லை உண்மையில் சீரியல் வரும் காட்சியா? என ஒன்றும் புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். அடுத்து வரும் எபிசோடுகளில் தான் என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து பார்க்கணும்.

Advertisement