திருமணமாகி 6 மாதத்தில் பிக் பாஸ் சென்ற சினேகன் – மனைவி வெளியிட்ட உருக்கமான வீடியோ.. என்னம்மா பீல் பண்ணி இருக்காரு!

0
952
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடல் ஆசிரியராக திகழ்பவர் சினேகன். இவர் எழுதிய பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளது. இவர் 2500 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். ஆனால், இது பலருக்கும் தெரியாத ஒன்று. அதிலும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் பாடல்களில் பல இவர் எழுதியது தான். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக சினேகன் இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்த சீஸினில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் அவர்கள் கன்னிகா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

கடந்த 10 ஆண்டுகளாக சினேகன் – கன்னிகா இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின் இவர்கள் திருமணம் பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்டு படு விமர்சியாக நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. மேலும், நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற தொடரில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன்:

அதோடு தேவராட்டம், அடுத்த சாட்டை படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் சினேகன் நடித்து இருந்தார். தற்போது சினேகன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து இருக்கிறார். இந்நிலையில் சினேகன் மனைவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவரை பிரிந்த சோகத்தில் உருக்கமான பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், பிக்பாஸ் வீட்டிற்கு சினேகன் செல்வதற்காக கன்னிகா பேக் செய்திருக்கிறார்.

பிரிவில் கன்னிகா பதிவிட்டு உள்ள வீடியோ:

அந்த வீடியோவில் ஏப்ரல் மாதத்தில் படத்தில் இடம்பெற்ற ‘பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை’ என்ற பாடலை போட்டிருக்கிறார். திருமணமாகி ஆறு மாதத்தில் கணவனைப் பிரிந்த சோகத்தில் கன்னிகா பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும், கன்னிகா பதிவிட்டு இருக்கும் ஏப்ரல் மாதத்தில் பொய் சொல்ல இந்த மனசுக்கு என்ற பாடல் சினேகன் எழுதியது என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக துவங்கியது.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்ய இருக்கின்றனர். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். நேற்று முதல் நாள் என்பதால் மட்டும் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இதில் முதல் நாளே வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, அபிராமி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நாமினேஷன்:

மேலும், கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், முதல் நாளே நாமினேஷன் தொடங்கப்பட்டது. அதில் இந்த வார நாமினேஷனில் வனிதா, சுரேஷ், ஜூலி, அபிநய், அனிதா, சினேகன், சுருதி, நிரூப் பெயர் இடம் பெற்று இருக்கிறது. இதில் முதலில் யார் வெளியே போக போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

Advertisement