கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நிரஞ்சனாவுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார்னு தெரிஞ்சா ஷாக்காகிடுவீங்க.

0
12690
niranjani

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் இயக்குநர் கெளதம் மேனன், VJ ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். ‘வியாகாம்18 ஸ்டுடியோஸ் – ஆண்டோ ஜோசப் ஃபிலிம் கம்பெனி’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்தது.

மேலும், இந்த படத்தில் கதாநாயகியின் தோழியாகவும், ரக்ஷ்னுக்கு ஜோடியாகவும் நடிகை நிரஞ்சனி நடித்திருப்பார். இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். பொதுவாகவே சினிமா உலகில் வாரிசுகளை படங்களில் அறிமுகப்படுத்துவது வழக்கமான ஒன்று தான். சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை படங்களில் நடிகர், நடிகை, இயக்குனர் என அறிமுகப்படுத்தி வருகிறார்கள். தற்போது இருக்கும் பல முன்னணி நடிகர்கள் எல்லாம் அந்த வகையில் வந்தவர்கள் தான்.

இதையும் பாருங்க : என்னது Vj ரம்யாவிற்கு ஒரு அண்ணன் இருக்காரா ? அதுவும் டாக்டரா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் அகத்தியனின் மகள் தான் நிரஞ்சனி. தற்போது இவர் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அகத்தியன் அவர்கள் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். தமிழ் மொழி மட்டும் இல்லாமல் ஹிந்தி மொழி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரது ஒரு மகள் பிக் பாஸ் புகழ் விஜயலக்ஷ்மி, இன்னோரு மகளான கனியை குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பார்த்திருக்கலாம்.

மேலும், நிரஞ்சனா பி.எஸ்.சி.எலெக்ட்ரானிக்ஸ் படித்து விட்டு காஸ்ட்யூம் டிசைனர் ஆவார். இவர் பல படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரையே நடிகை நிரஞ்சனா திருமணம் செய்ய இருக்கிறாராம். படத்தின் போதே இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
Advertisement