ஆர் ஜே பாலாஜி பெரிய நடிகராக வரவேண்டும்.! முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வாழ்த்து.!

0
277
Lkg

ஆர் ஜே வாக தனது பயணத்தை துவங்கி பின்னர் சினிமாவில் காமமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது ‘எல்.கே.ஜி.’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே.பாலாஜி எழுதியுள்ளார். ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 22-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘அரசியலுக்கு வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி’ என்று தான் படத்தின் விளம்பரம் தொடங்கப்பட்டது. மேலும், படத்தின் போஸ்டர்கள், ட்ரெய்லர் என அனைத்துமே சமீபத்திய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்யும் தொனியில் இருந்ததால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இந்திய அணி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கபில் தேவ்வும் ஆர் ஜே பாலாஜியும் கிரிக்கெட் வர்ணனை செய்யும் போது நெருக்கமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.