தனது கணவருடன் வளைகாப்பை நடத்திய மேக்னா – சிரஞ்சீவி உடன் இருப்பது போல தத்ரூபமாக எடிட் செய்து கொடுத்த வைரல் எடிட்டர்.

0
1187
megna
- Advertisement -

சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CF7GgUbnIaW/?igshid=1502icsfxixs5

பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

- Advertisement -

நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். அதற்கு காரணத்தை சொன்ன மேக்னா, சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் அனைவரும் அன்று முழுதும் சந்தோசமாக அவரது இரங்கலை அனுசரித்தோம் என்று கூறியிருந்தார்.

View this post on Instagram

🙏🙏🙏

A post shared by Kiran Kumar K (@karanacharya.kk) on

சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் நடிகை மேக்னாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. , அதில் கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் ஆளுயர கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வு படங்களை பகிர்ந்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புகைப்படத்தை மாற்றி அசரவைத்த கரணாசாரியா, மேக்னாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி இருப்பதை போல எடிட் செய்து அசத்தியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement