கர்ணன் திரௌபதையா இது – தொடை தெரியும் உடையில் கொடுத்த கிளாமர் போஸை பாருங்க.

0
19726
rajisha
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.

இதையும் பாருங்க : கர்ணன் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – காரணம் இது தானாம் (அதுவும் அதே ஊர்ல)

- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை. இந்த படத்தில் தனுஷ் அடுத்த நடித்த லால், நடராஜன், யோகி பாபு போன்ற பலரின் நடிப்பு பாராட்டபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்து அனைவரின் மனதை கொள்ளை கொண்டவர் ரஜிஷா விஜயன்.

ஆரம்ப காலத்தில் பல்வேறு மலையாள தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்த இவர் அதன் பின்னர் 2016 ஆண்டு தான் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை இவர் மலையாளத்தில் 7 திரைப்படங்களில் நடித்துளளார். ஆனால், அவர் தமிழில் அறிமுகமானது கர்ணன் படம் மூலம் தான். கர்ணன் படத்தில் கிராமத்தில் லுக்கில் இருந்த இவரின் சில கிளாமரான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement