கர்ணன் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – காரணம் இது தானாம் (அதுவும் அதே ஊர்ல)

0
5864
karnan

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்திருக்கும் இப்படம், தனுஷின் கரியரில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்ற படம் எனும் புதிய சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. கர்ணன் படத்தை பார்த்துவிட்டு பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கே சென்று பாராட்டிய கரிகாலன் (விக்ரம்) – இதோ புகைப்படம்.

- Advertisement -

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இந்த திரைப்படம். இப்படி ஒரு நிலையில் தூத்துக்குடியில் கர்ணன் ஓடி வரும் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள கோல்டன் புறம் பகுதியில் உள்ள KSPS கணபதி திரையரங்கத்தில் கர்ணன் திரைப்படத்தை பார்ப்பதற்கு 5 இளைஞர்கள் டிக்கெட் புக் செய்து பார்க்க சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் குடித்து இருந்ததால் அவர்களை திரையரங்கில் அனுமதிக்க மறுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை தியேட்டருக்குள் வீசியுள்ளனர். இதனால் திரையரங்கில் சிறிது தீப்பற்றி எறிந்துள்ளது. இந்த சமத்துவம் தொடர்பாக காவல் துறையினர் 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement