அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்ற தலைவர் நான் – இந்த இயக்குனர் இப்படி ஒரு விஜய் வெறியறாமே. யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க.

0
5144
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். அதிலும் இவருடன் படம் செய்ய பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் காத்துகொண்டு இருக்கின்றனர். அதிலும் ஒரு சில இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் எடுக்க மிகவும் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குனரான மாறி செல்வராஜ் தான் எந்த அளவிற்கு விஜய் ரசிகர் என்பதை கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் இருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் யூடுயுபில் எக்கச்சக்க லக்ஸ்களையும் வியூஸ்களையும் குவித்து வருகிறது. இயக்குனர் மாறி செல்வராஜ் 2006 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் வந்தார். அதன் பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் கூட ஒரு சிறு காட்சியில் நடித்து இருப்பார் மாரி செல்வராஜ்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மாறி செல்வராஜ், தான் ஒரு தீவிர விஜய் ரசிகர் என்றும் தியேட்டருக்கு சென்று விஜய் படம் மட்டும் தான் பார்ப்பேன் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், அடங்கா தமிழன் விஜய் ரசிகர் மன்றதின் தலைவராக இருந்ததாகவும் கூறியுள்ளார் மாறி செல்வராஜ். தற்போது மாரி செல்வராஜ், தனுஷின் காரணன் படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement