‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தில் தனுஷ்ஷை தவிற இந்த படத்தில் நடித்த லால், நட்டி நடராஜன், யோகி பாபு என்று அனைவரும் தனுஷுக்கு இனியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். அதிலும், இந்த படத்தில் தனுஷுக்கு பின்னர் பலராலும் பாராட்டப்பட்டது ‘எமராஜா’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் லாலின் நடிப்பு தான். மலையாள நடிகரான இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து தமிழில் சண்டக்கோழி, ஓரம் போ, காளை, குட்டி புலி, சீமராஜா என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதையும் பாருங்க : தனது முதல் படத்திலேயே பிகினி உடையில் தோன்றியுள்ள மும்தாஜ் – அதுவும் 18 வயதில். இதோ புகைப்படம்.
கர்ணன் படம் வெளியான சில வாரங்களுக்கு முன்னர் தான் கார்த்தியின் சுல்தான் படம் கூட வெளியானது. அந்த படத்திலும் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படத்தை விட கர்ணன் படத்தில் தான் லாலின் நடிப்பும் சரி, அவரது டப்பிங்கும் சரி, மிகவும் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தில் லாலுக்கு டப்பிங் கொடுத்த டப்பிங் கலைஞரின் விவரம் வெளியாகியுள்ளது.
அது வேறு யாரும் இல்லை ஹாலிவுட் கதாபாத்திரங்கள் முதல் டோலிவுட் கதாபாத்திரம் வரை டப்பிங் கலைஞராக பணியாற்றிய கதிர் தான். இவர் தமிழில் பல்வேறு படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். அதே போல ஹாலிவுட்டில் இருந்து தமிழில் டப் செய்யப்படும் பல படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றி இருக்கிறார். Thor குரல் கூட இவரின் குரல் தான். அது போக இவர் மாஸ்டர் படத்தில் கூட நடித்து இருப்பார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.