தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். தனுஷ் அவர்கள் சினிமா உலகில் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல திறமையை காண்பித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா. இதான் படத்தின் டைட்டில் – டீஸர் இதோ.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற பாடல் வெளியாகி இருந்தது.கண்டா வர சொல்லுங்க மணிகண்டனை கையோடு கூட்டி வாருங்க என்ற ஐயப்பன் பாடலை போல இருக்கிறது என்று நெடிசங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே தர்பார் படத்தில் அனிருத் இசையமைத்த ”நான் தாண்டா இனிமேல்” பாடல் ஐயப்பன் பாடலில் இருந்து சுட்டது என்று பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதுகுறித்து அனிருத் எதுவும் பேச வில்லை.

ஆனால், கர்ணன் படத்தின் இந்த பாடல் தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடிய ஐயப்பன் பாடலின் இன்ஸ்போரேஷன் தான் என்பதை உறுதிபடுத்தும் விதமாக இந்த பாடலின் ஆரம்பத்திலேயே தேக்கம்பட்டி s சுந்தர்ராஜனுக்கு நன்றியை தெரிவித்து தான் ஆரம்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பாடல் மட்டுமல்ல தேக்கம்பட்டி s சுந்தர்ராஜனின் பல பாடல்கள் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு எந்த ஒரு ராயல்டியும் வழங்கப்படவில்லை.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இது குறித்து பேசியுள்ள சுந்தர்ராஜனின் மகன் கர்ணன், இப்பலாம், பாட்டுக்கு, குரலுக்கு, மெட்டுக்கு’னு ராயல்டி கேக்குறாங்க. அதைப் பத்தியெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க. நாங்க அந்த அளவு விவரமான ஆளுங்களும் இல்லை. இந்த பாட்டு, தேக்கம்பட்டி சுந்தர்ராஜன் பாடுன பாட்டு’னு சொல்லிட்டு பாடுங்க’னு தான் கேக்குறோம் எங்க அப்பா இறந்து 18 வருசமாச்சு. ஒவ்வொரு திருவிழாவுலையும் எங்க அப்பா குரல்தான் கேக்குது. ஆனால், ஒரு தடவை கூட அவர் பெயரை நாங்கள் கேட்டது இல்ல. ஆனால், முதல் முறையா, அவரோட பெயரை போட்டு மரியாதை செஞ்சது எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. இயக்குநர் மாரிசெல்வராஜ் என்னிடம் போனில் பேசினார். ’என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்க…’ என்றார். அந்த வார்த்தையே போதும்.

Advertisement
Advertisement