நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான வனிதா பல ஆண்டுகளுக்கு பின்னர் கதாநாயகியாக களமிறங்க இருக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.
அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் பிரிந்தார். நடிகை வனிதா சந்திரலேகா படத்தில் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்த வனிதா, திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு ரீ-என்ட்ரியை கொடுத்தது. அதன் பின்னர் நடிகை வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார்.
சமீபத்தில் தான் அந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதே போல யூடூயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.இப்படி ஒரு நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா நடித்த பாம்பு சட்டை படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க உள்ளாராம். இவர் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாம். படத்துக்கு அனல் காற்று என்றும் பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்து இருக்கிறார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வனிதா. இந்த படத்திற்கு அனல் காற்று என்று பெயர் வைத்துள்ளார்களாம். இப்படி ஒரு நிலையில் வனிதா வேறு ஒரு படத்தில் நடித்துள்ளார். 2k என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுளளார் வனிதா.