கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் பின்னணி கதை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய மூன்று படங்களுமே ஆட்ரிக் வெற்றி அடைந்தது.
அதோடு கார்த்தி அவர்கள் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜப்பான். இந்த படத்தை ராஜமுருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கிறது.
ஜப்பான் படம்:
மேலும், இது கார்த்தியின் 25வது படம் ஆகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. படத்தில் கதாநாயகன் கார்த்தி ஒரு திருடன். அவர் மிகப்பெரிய நகை கடையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகையை திருடி விடுகிறார். அவரை போலீசார் தேடுகிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்த நிலையில் இந்த படம் திருச்சியில் உள்ள மிகப்பெரிய நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்த திருடன் ஒருவனின் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜப்பான் படத்தின் கதை:
திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரி மிகப்பெரிய கடை. கடையில் நான்கு பாதுகாவலர்கள் எப்போதும் இருப்பார்கள். இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது மழை நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அந்த கடைக்கு நான்கு பாதுகாவலர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு சத்தம் இல்லாமல் கடைக்குள் செல்ல வேண்டும். பின் கடையின் மேற்கு பகுதி சுவரை ரம்பம் வைத்து அறுத்து உள்ளே திருடன்கள் நுழைந்தார்கள். இதை அறுக்க இரண்டரை மணி நேரம் ஆனதாம். இந்த சம்பவத்தை இரண்டு பேர் செய்திருந்தார்கள்.
ஒன்று முருகன், இன்னொருவர் கணேசன். இரண்டு பேருமே நகைக்கடையில் சத்தம் இல்லாமல் நகை நகைகளை எடுத்துக் கொண்டு வந்தார்கள். மொத்தமாக 13 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ நகைகளை திருடி இருக்கின்றனர். இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடேஅலறி இருந்தது. பின் கடையில் இருந்த சிசிடி கேமராவை போட்டு பார்த்தால் அவர்கள் முகமூடி அணிந்திருந்தது தெரிந்தது. இந்த பாணியில் திருட்டு சம்பவம் நடத்துபவர்கள் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் தான் என்று போலீசார் விசாரித்ததில் தெரிய வந்தது. கொள்ளையடித்த நகைகளை உடனடியாக இடமாற்றம் செய்வார்கள் என்று தமிழ்நாடு முழுவதும் வாகனங்களை சோதனை செய்திருந்தார்கள்.
கொள்ளையடித்த நகைகளை முருகன் தன் உறவுக்காரர்களுக்கு பிரித்து கொடுத்து பத்திரமாக வைத்து இருக்க சொன்னான். முருகன் திருவெம்பூருக்கு அருகில் உள்ள வேங்கூர் சென்று விட்டார். பின் ஒரு வழியாக பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் சரணடைந்தார். அப்போது விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 110 திருட்டு சம்பவத்தில் முருகனுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது பின் கணேசனையும் கைது செய்திருந்தார்கள். முருகன் இந்த திருட்டு தொழில் செய்வதற்கு காரணம், அக்கா மகனான சுரேஷ் தான். அவரை எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக்க வேண்டும் என்று தான் இந்த மாதிரி அவர் திருட்டு தொழிலை செய்திருக்கிறார் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. பின் முருகன் இறந்து விட்டார்.அவர் மீது சென்னையில் 12 வழக்குகளும் கர்நாடக மாநிலத்தின் 46 வழக்குகளும் ஆந்திர மாநிலத்தில் ஒரு வழக்கம் நிலுவையில் இருக்கின்றது.