படத்துல தேவையில்லாம அந்த சீன்லாம் வைக்கப் பாக்குறாங்க – வாணி போஜன் வேதனை.

0
327
- Advertisement -

படத்தில் வரும் படுகையறை காட்சிகள் குறித்து வாணி போஜன் வேதனையுடன் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் வாணி போஜன். இவர் முதலில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்யில் தான் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து இவர் வடிவமைப்பு வேலையை செய்து இருந்தார். அதன் மூலமாகத்தான் சின்னத்திரையில் உள்ள தொடர்களில் நடிக்க தொடங்கினார் வாணி.

-விளம்பரம்-

இவர் தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், தெய்வமகள் சீரியல் மூலம் தான் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே சேர்ந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வாணி. மேலும், வாணி போஜன் தெய்வமகள் சீரியலுக்கு பிறகு எந்த ஒரு சீரியலிலும் நடிக்க வில்லை. இதனைத்தொடர்ந்து வாணி போஜன் அவர்கள் சினிமா திரையில் கலக்கி வருகிறார்.

- Advertisement -

வாணிபோஜன் குறித்த தகவல்:

அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த செங்களம் என்ற வெப் சீரிஸில் வாணி நடித்து இருந்தார். இந்த சீரிஸில் கலையரசன், ஷாலி நிவேகாஸ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அபி அண்ட் அபி என்டர்டெயின்மென்ட் தயாரித்து இருக்கிறது. பொலிட்டிக்கல் திரில்லர் பாணியில் இந்த வெப் சீரிஸை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாணி போஜன் நடிக்கும் படங்கள்:

இதனை அடுத்து வாணி அவர்கள் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ரேக்ளா, ஆர்யன் போன்று தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதை அடுத்து விதார்த்துடன் ஒரு படம் வாணி போஜன் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் நீண்ட நாட்களாக ரிலீஸ்க்கு காத்துக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

வாணி போஜன் பேட்டி:

பின் இவர் ஒரு புதிய வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். சமீபத்தில் வாணி போஜன் நடித்த பாயும் ஒளி நீ எனக்கு என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்து இருக்கிறார். அதன் பின் பரத் நடிப்பில் வெளிவந்த லவ் படத்தில் வாணி போஜன் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி இவர் வெப் சீரிஸ், படங்கள் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் வாணி போஜன் சமீபத்தில் அளித்த பேட்டியில், படங்களில் படுக்கைய காட்சிகளை வைக்கிறார்கள். ஆனால், தேவை இல்லாமல் சில படங்களில் அந்த காட்சிகள் வைக்கிறார்கள்.

படுக்கையறை காட்சி:

அந்த படத்தின் பெயரை நான் குறிப்பிடவில்லை. அந்த படுக்கை அறை காட்சி கதைக்கு தேவை இல்லை. ஆனால், அந்த காட்சியை எடுக்க நினைத்தார்கள். இதனால் நான் ஏன் இதை மசாலாவாக செய்கிறீர்கள்? தேவை இருந்தால் போதுமே என்று கேட்டவுடன் அந்த காட்சியை எடுக்க வேண்டாம் என்று படப்பிடிப்பை முடித்தார்கள். இதனால் படத்திற்கும், கதைக்கும் தேவைப்பட்டால் மட்டும் இது போன்ற கதைகளை சேர்க்கலாம். தேவையில்லாமல் வைப்பது தேவையற்ற ஒன்று. நடிப்பு என்று வரும்போது கதாபாத்திரம் தான் முக்கியம். கதாபாத்திரமும் கதைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பணத்தைவிட நான் நடிக்கும் கதாபாத்திரம் தான் முக்கியமானது என்று கூறியிருக்கிறார்.

Advertisement