kgf2 குறித்து கார்த்தி போட்ட பதிவு – செம காண்டான விஜய் ரசிகர்கள். ஏன் பாருங்க (நல்லா இருந்தா சொல்ல மாட்டாராப்பா)

0
574
- Advertisement -
கன்னட சினிமாவின் ராகிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ். இவர் ‘ஜம்பட ஹுகுடி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் இவர் கன்னடத்தில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது கே ஜி எப் திரைப்படம் தான். முதல் பாகம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. அதுமட்டும் இல்லாமல் முதன் முறையாக ஒரு கன்னட படம் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது என்றால் யாஷ் நடித்த “கே ஜி எப்” என்பது குறிப்பிடத்தக்கது .முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் தான் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுதும் வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் 2 மடங்கு மாசாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். விறுவிறுப்பான கதைகளும், காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆர்ப்பரிக்கும் சண்டைக்காட்சிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்ஷன் என படத்திற்கு தேவையான அனைத்தையுமே கொடுத்து ரசிகர்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்

-விளம்பரம்-

kgf குறித்து கார்த்தி போட்ட பதிவு :

kgf படம் குறித்து பல பிரபலங்களும் பதிவிட்டு வரும் நிலையில், நடிகர் கார்த்தி இந்த படம் குறித்து பதிவிட்டுள்ளதாவது 'எதையாவது மிக பெரியதாக கற்பனை செய்து அதை முழுமையான பாணியுடன் வழங்குவது மிகப்பெரிய கைதட்டலுக்கு அழைப்பு விடுக்கிறது. காட்சிகள், வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் மகத்துவத்தை உயர்த்தி, ஒரு தாயின் கனவின் சக்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. Kgf படக்குவிற்கு வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.  

திட்டி தீர்க்கும் விஜய் ரசிகர்கள் :

கார்த்தியின் இந்த பதிவால் யாஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் விஜய் ரசிகர்கள் கார்த்தி மீது பெருத்த அப்செட்டில் இருந்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே விஜயயின் பீஸ்ட் படம் குறித்து கார்த்தி எந்த பதிவையும் போடவில்லை. சொந்த மொழியில் வெளியாகி இருக்கும் படத்தை பற்றி பதிவிடாமல் வேறு மொழி படத்தை கார்த்தி பாராட்டி இருப்பதால் கார்த்தியை விஜய் ரசிகர்கள் திட்டி தீர்க்க, ஒழுங்கா படம் எடுத்தா சொல்ல மாட்டாங்களா என்று ஜெனரல் ஆடியன்ஸ் சிலர் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் விஜய். ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். படம் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், பீஸ்ட் படத்திற்கு ஒருநாள் கழித்து வெளியான kgf2 சக்கை போடு போட்டு வருகிறது.

பீஸ்ட் இடத்தை பிடிக்கும் Kgf :

இந்த நிலையில் விஜய்யின் பிஸ்ட் படம் வெளியான திரையரங்களில் கே ஜி எஃப் 2 படம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.பீஸ்ட் படத்துக்கு ஒதுக்கப்பட்ட திரையரங்கில் எல்லாம் கேஜிஎப் 2 படம் மாறி உள்ளன என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 10 ஆயிரம் தியேட்டர்களில் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் 250 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது கேஜிஎப் 2 படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருப்பதால் ஒரே நாளில் கூடுதலாக 350 தியேட்டர்களில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியிடப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement