அப்பா சின்ன வயசுலயே எங்கள விட்டுட்டு போயிட்டாரு, நாங்க 4 பொண்ணுங்க – மனம் திறந்த ‘கார்த்திகை தீபம்’ ஆர்த்திகா

0
464
- Advertisement -

பிரபல சீரியல் நடிகை ஆர்த்திகா சமீபத்தில் அளித்த பேட்டிதான் தற்போது வைரலாகி வருகிறது. தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகையை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதிவிரைவில் உருவாகி விடுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றுள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். தற்போது அதுபோல் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் ஆத்திகா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

ஆனால் சின்னத்திரை நடிகர்களுக்கு இன்று மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பிருக்கிறதோ, அந்த அளவிற்கு தொழிலில் போட்டியும் உள்ளது. அப்படி எல்லா தடைகளையும் கடந்து வெற்றி நடை போடுபவர்கள் சிலர் தான். அந்த வகையில் ஆர்த்திகாவும் அடங்குவார். இவர் ‘கார்த்திகை தீபம்’ சீரியலில், தீபா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் ஆறு வருடங்களாக கார்த்திக் ராஜாவை என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆர்த்திகா பேட்டி:

சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆர்த்திகா, ‘கார்த்திகை தீபம்’ சீரியல் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேல் ஆகப்போகுது. சீரியல்ல வர்ற தீபா ரொம்ப அமைதியான கதாபாத்திரம். ஆனா, நான் அப்படி கிடையாது சீக்கிரம் ரியாக்ட் பண்ணிடுவேன். அந்த குணத்தை தீபா கதாபாத்திரம் கொஞ்சம் மாத்தி இருக்கு. நம்ம வாழ்க்கையில் வரக்கூடிய சூழ்நிலைகளுக்கு உடனே ரியாக்ட் பண்ணாம, கொஞ்சம் நிதானமாக இருந்தால் பல நெகட்டிவான விஷயங்களை தவிர்த்து விடலாம் என்று கூறியுள்ளார்.

நெகட்டிவ் கமெண்ட்ஸ் குறித்து:

தொடர்ந்து பேசிய அவர், நாம என்ன பண்ணாலும் நெகட்டிவிட்டி இருந்துகிட்டே தான் இருக்கும். முன்பெல்லாம் நெகட்டிவ் கமெண்ட்கள் வரும்போது, ஐயோ நம்ம லைஃப் அவ்வளவுதான்னு நினைச்சேன். உண்மைய சொல்லணும்னா நம்மள கஷ்டப்படுத்தணும்னு தான் அவங்க அப்படி பண்றாங்க. அதுக்கு நம்ம இடம் கொடுக்கக் கூடாது. இங்க எதுவும் உடனே மாறப்போவதில்லை. அதனால நமக்கு என்ன வேணுமோ அதுல மட்டும் கவனம் வச்சு போய்கிட்டே இருக்கணும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

தனது குடும்பம் குறித்து:

மேலும், நான் இன்னைக்கு இந்த இடத்தில் இருக்கிறதுக்கு ஒரே காரணம் என்னோட ஃபேமிலி தான். சின்ன வயசுலயே என்னோட அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு. எங்க வீட்ல மொத்தம் நாலு பொண்ணுங்க. எங்கள அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு தான் வளர்த்தாங்க. அவங்க அடிக்கடி சொல்றது ஒன்னே ஒன்னு தான். கெட்ட பெயர் சீக்கிரம் வந்துவிடும். ஆனா நல்ல பெயர் எடுக்க ரொம்ப நேரம் பிடிக்கும் என்று. அது எப்போதுமே என்னோட மைண்ட்ல இருக்கும்.

கணவர் குறித்து ஆர்த்திகா:

பின் தனது கணவரை பற்றி கூறிய அவர், நானும் கார்த்திக்கும் கிட்டத்தட்ட ஆறு வருஷம் லவ் பண்ணோம். சினிமா வாழ்க்கையில நிறைய பேர் என்கிட்ட ப்ரொபோஸ் பண்ணி இருக்காங்க. ஆனா, கார்த்திக் என்ன புரிஞ்சுகிட்ட மாதிரி வேற யாரும் என்கிட்ட நடந்துக்கல. என் கணவர் எனக்கு ரொம்ப சப்போட்டா இருக்காரு. திருமணத்தில் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்துகிறது ரொம்ப முக்கியமான விஷயம் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். பின் நான் சினிமாவில் இருந்து தான் சீரியலுக்கு வந்தேன், மீண்டும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிக்க ஆசை என்றும் தெரிவித்துள்ளார் ஆர்த்திகா.

Advertisement