ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ‘கார்த்திகை தீபம்’ ஒன்று. சமீபத்தில் இதன் முதல் பாகம் முடிந்த நிலையில் தற்போது புதிய கதைகளத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்கி இருக்கிறது. இந்த வாரம், கார்த்திக்கின் தாத்தா ராஜ சேதுபதி கோவிலை திறக்க முடியாமல் இருக்க, அப்போது அங்கு வரும் கார்த்திக், கோவில் பூட்டை உடைத்து கோவிலை திறக்க அங்கு இருப்பவர்கள் சண்டை போடுகிறார்கள்.
அவர்கள் அனைவரையும் கார்த்திக் அடித்து விட்டு கோவிலை திறந்து பூஜை செய்கிறார். கார்த்திக் கோவிலை திறந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீரை ஊற்றியதும் மழை கொட்ட தொடங்கியதும் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இதையடுத்து நேற்று எபிசோடில், கார்த்திக், மாமாவிற்கும் நமக்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். அதற்கு ராஜசேதுபதி மாமாவால் எந்த பிரச்சனையும் இல்லை, உன் அத்தை சாமுண்டேஸ்வரி தான் பிரச்சனை. அவளுக்கு ஆம்பளைங்க என்றாலே பிடிக்காது என்று அவரின் கதையை சொல்கிறார்.
கார்த்திகை தீபம் சீரியல்:
அதோடு பாவம் உன் மாமா ராஜராஜன் மகள்களுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருக்கான் என்று கார்த்திக்கிடம் தாத்தா வருத்தப்பட, நீங்க கவலைப்படாதீங்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதை வச்சு அத்தை மாமாவை வீட்டுக்கு கூட்டிட்டு வருவேன் என்று கார்த்திக் சொல்கிறார். பின், தன் அத்தையைப் பார்க்க வேண்டும் என்று கார்த்திக் செல்ல, அங்கு அத்தை சாமுண்டேஸ்வரக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவதை பார்த்து, மாமா டம்மி என்பதை புரிந்து கொள்கிறார்.
நேற்றைய எபிசோட்:
பின், போன இடத்தில் கார்த்திக் ஒருவருக்கு உதவி செய்ய, பதிலுக்கு அவர் நண்பன் ஆகி கார்த்திக் தங்குவதற்கு வீடு வாடகைக்கும் பிடித்துக் கொடுக்கிறார். இதையடுத்து இருவரும் அந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு செல்கின்றனர். அப்போது சாமுண்டேஸ்வரிக்கு அனைவரும் மரியாதை கொடுப்பதை பார்த்துவிட்டு, கார்த்திக் எதுவுமே தெரியாதது போல் சாமுண்டேஸ்வரி பற்றி விசாரிக்க, அந்த நண்பன் இவங்க தான் இந்த ஊரிலேயே பெரிய ஆள், இவங்களுக்கு நான்கு பெண்கள், இவங்களுக்கு ஆண்களே பிடிக்காது என்று சொல்ல அனைத்தையும் கேட்டுக்கொள்கிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சாமுண்டேஸ்வரி தரப்பில் போட்டியில் பங்கேற்க யாரும் இல்லை என்பதால் தனக்கு ஆதரவாக போட்டியில் பங்கேற்று ஜெயித்தால் 15 பவுன் செயினை பரிசாக கொடுப்பதாக அறிவிக்கிறார். இதுதான் சரியான நேரம் என கார்த்திக் போட்டியாளராக களத்தில் இறங்கி சிவனாண்டியை ஓட விடுகிறார். பின், சாமுண்டேஸ்வரி கார்த்திக்குக்கு பரிசை கொடுக்க, நான் பரிசுக்காக இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை என கார்த்திக் பதிலடி கொடுக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அதோடு, நீங்க யாரும் ஆம்பளையே இல்லையா என்று நீங்கள் கேட்டதால் தான் கலந்து கொண்டேன். எனக்கு இந்த பரிசு வேண்டாம் என்று சொல்லி, குச்சியில் செயினை வாங்கி அதை அப்படியே தூக்கி வீச அப்போது அந்த வழியாக வந்த கதாநாயகி ரேவதி கழுத்தில் செயின் விழுகிறது. இதை கவனிக்காத கார்த்திக் மீசையை முறுக்கி விட்டபடி கிளம்பிச் செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.