‘கார்த்திக் டயல் செய்த என்’ வசூல் எவ்வளவு தெரியுமா ? இத்தனை லட்சம் லாபமா ?

0
1672
gautham
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கெளதம் மேனனும் ஒருவர். இவர் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான “விண்ணைத் தாண்டி வருவாயா” படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிம்பு, த்ரிஷா இருவரின் சினிமா வாழ்க்கையிலுமே மிக முக்கியமான படமாக இது அமைந்தது. இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் 2ம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

-விளம்பரம்-

தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் போன்று ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படம் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் மட்டும் இதில் நடித்து உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் இந்த குறும்படத்தை இயக்கி இருந்தார் .

- Advertisement -

இந்த குறும்படம் கார்த்திக் 10 வருடங்களுக்கு பிறகு ஜெஸ்ஸி-யிடம் பேசுவது போன்று எடுக்கப்பட்டுள்ளது. 12 நிமிடத்துக்குள் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இந்த ஷாட் பிலிம் தற்போது யூடியூப் தளங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இதில் சிம்பு கேரளாவில் உள்ள த்ரிஷாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். நீ வேண்டும் என்கிறார் சிம்பு.

வீடியோவில் 10 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

நீ என்னுடைய மூன்றாவது பிள்ளை என்கிறார் த்ரிஷா. இது தான் குறும்படத்தின் கதை. இந்தக் குறும்படத்தை Youtube ல் இதுவரை 7 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் இந்த குறும்படத்தால் இயக்குனர் கௌதம் மேனன் 20 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்து உள்ளார் என்று பிரபல வலைத்தளத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement