கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் இவரா.! சன் பிக்சர்ஸ் அறிவிப்பு

0
923
Rajini

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இவர் ஏற்கனவே பீட்சா, ஜிகிர்தண்டா போன்ற ஹிட் படங்களை எடுத்துள்ளார். கலைஞர் டீவி யில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சிறந்த குறும் படங்களை இயக்கி அதன் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

- Advertisement -

சமீப காலமாக ரஜினி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் தேர்தெடுத்து நடித்து வருகிறார், அதனால், தான் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புகளை அளித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில்கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார் என்றும்,படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கபோகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய தகவலைகள் வந்திடாமல் இருந்த நிலையில், தற்போது இந்தப்படத்தின் இசையைமைபாளராக அனிருத் கமிட் ஆகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளைஞர்களில் அதிகம் விரும்பப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். மேலோடியாக இருந்தாலும் சரி,குத்து பாட்டாக இருந்தாலும் சரி இவர் அளிக்கும் பாடல்கள் அனைத்தும் கிளாசிக் ஹிட் தான். தற்போது இவர் ரஜினி படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்ற செய்தி இவரது ரசிகர்களிக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது.

-விளம்பரம்-

anirudh

மேலும் ,ரஜினி நடித்த 2.0 படத்தின் படப்பிடிப்புகள் எப்போதோ நிறைவைடந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கான ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கி விட்டதாம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இந்த படத்தை பற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் “தற்போதைக்கு இந்த படத்தில் ரஜினி மற்றும் விஜய் சேதுபதி மட்டும் தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகர்கள், இன்னும் இந்த படத்தில் நடிக்கும் பெண் கதாபாத்திரம் குறித்து இன்னும் முடிவெக்கவில்லை. இந்த படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement