காக்கா கழுகு சர்ச்சைக்கு குறித்து கேட்ட Vj பார்வதி – கடுப்பாகி கார்த்திக் சுப்புராஜ் சொன்ன பதில்

0
389
VjParvathy
- Advertisement -

காக்கா- கழுகு சண்டை குறித்த கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கும் பதிலடி தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. நெல்சன் இயக்கிய ஜெயிலர் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியிருந்த காக்கா- கழுகு கதை தான் கடந்த சில மாதங்களாகவே சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது. இது குறித்து பலருமே பலவிதமான கமெண்ட்களை கொடுத்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

பலர் ரஜினிகாந்திற்கு ஆதரவாகவும், பலர் விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். சொல்லப்போனால் இதை சோசியல் மீடியாவில் பனிப்போராகவே ஆக்கிவிட்டார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பது, இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜிடம் தொகுப்பாளர் கேட்டிருக்கிறார். உடனே கடுப்பாகி கார்த்திக் சுப்புராஜ், நீங்கள் தான் சண்டையை மூட்டி விட பார்க்கிறீர்கள்.

- Advertisement -

கார்த்திக் சுப்புராஜ் பேட்டி:

ரசிகர்கள் சண்டை முட்டாள் தனம். எல்லா நடிகர்கள் படங்களையும் மக்கள் ரசித்து பார்க்கிறார்கள். சினிமாவை தான் ரசிக்க வேண்டும். அதை வைத்து சண்டை போடக்கூடாது. நல்ல படங்கள் எல்லாம் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. நடிகர்கள் இடையே சண்டையே வேண்டாம். என்னிடமே இயக்குனர்களுடன் சண்டையை மூட்டி விட பார்க்கிறீர்களா? என்று வெளுத்து வாங்கி இருக்கிறார். தற்போது இவர் பேசி இருக்கும் வீடியோ தான் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கார்த்திக் சுப்புராஜ் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் இன்ஜினியரிங் முடித்து இருக்கிறார். இருந்தாலும் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தினால் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பீட்சா படத்தின் மூலம் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்கள்:

இதனைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட போன்ற பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார். அதற்கு பின் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் இவர் விக்ரமை வைத்து மகான் படத்தை இயக்கி இருந்தார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்:

இந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. சொல்லப்போனால் மிகப்பெரிய அளவு நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. தற்போது இவர் சிறிய இடைவெளிக்கு பின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Advertisement