நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த கார்த்திகாவின் தற்போதய நிலை – விபரம் உள்ளே

0
2027

நாயகன் படத்தில் வேலு நாயக்கர் கமலுக்கு மகளாக நடித்து அசத்தி இருப்பார் கார்த்திகா.கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கார்த்திகா. அவருடைய அப்பா ஒரு மிலிட்டரி ஆபீசர். அவருடைய உண்மையான பெயர் சுனதா. ஆனால் படங்களில் நடிப்பதற்காக கார்த்திகா எனவைத்துக்கொண்டார்.

80களில் புகழ்பெற்று விளங்கிய டாவ்-5 நடிகைகளில் கரதிகாவும் ஒருவர். சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தும் அவர் முதலில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தவர். அவரது நடை உடை பாவனைகளை பார்த்து மலையாள இயக்குனர் பாலச்சந்திர மேனன் அவரை 1985ஆம் ஆண்டு ‘மணிசேப்பு தோரணபோல்’ என்ற ஒரு மலையாள படத்தில் மோகன்லாலுக்கு ஹீரோயினாக நடிக்க வைத்தார். முதல் படத்திலேயே மோகன் லாலுடன் நடிக்கும் வாய்ப்பினை பெற்று நடிப்பில் அசத்தினார் கார்த்திகா.

இதனனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. மோகன் லாலுடன் மட்டும் சில வருடங்களில் 17 படம் நடித்தார். அதே போல தமிழில் 1987ஆம் ஆண்டு பூவிழி வாசலிலே மற்றும் நாயகன் ஆகிய படங்களில் நடித்தார்.

karthika

இதில் நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக செம்மயாக நடித்து அசத்தினார். இதனால் தமிழ் ரசசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார் கார்த்திகா. நடிப்பின் உச்சத்தில் இருந்த கார்த்திகா திடீரென சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

karthikaதற்போது எந்த ஒரு புகழ் வெளிச்சமும் வேண்டாம் என் ஒதுக்கி விட்டு தனது கணவருடன் மாலத்தீவில் வசித்து வருகிறார் கார்த்திகா. இருவருக்கும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை.