விஸ்வாசம் படத்தை போல இந்த படமும் வெற்றி பெரும்.! பிரபல இயக்குனர் பேட்டி.!

0
790
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதொடு பல்வேறு வசூல் சாதனைகளையும் புரிந்தது. இந்நிலையில் விஸ்வாசம் படம் போலவே ‘மெஹந்தி சர்க்கஸ்’ படமும் ஹிட் அடிக்கும் என்று பிரபல இயக்குனர்
கரு.பழனியப்பன்கூறியுள்ளார்.

-விளம்பரம்-

கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், ராஜு முருகனின் உதவி இயக்குனரான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

- Advertisement -

இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிவகுமார், இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் தலைமை ஏற்க இவர்களுடன் அஜித் 59 படத்தை இயக்கி வரும் எச். வினோத்,சிறுத்தை சிவா மற்றும் இப்படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்ட கரு.பழனியப்பன் பேசியபோது,
சரவணன், யுகபாரதி, ராஜு முருகன் ஆகியோர் கஷ்டப்பட்டு தான் வளர்ந்தார்கள். சரவணன் இயக்குனராக ஆடைப்பட்டு அவரது தம்பி ராஜு முருகனை இயக்குனராக்கினார். தற்போது சரவணனும் இயக்குனராகி விட்டார். இருப்பதலிலேயே கஷ்டமான தொழில் சமைப்பது தான். அதில் திறமை வாய்ந்தவர் ஹீரோ ரங்கராஜ். இந்த படத்திலும் அவர் அறுசுவை விருந்தாக படத்தை கொடுப்பார். தற்போது விஸ்வாசம் போன்ற குடும்ப படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் இந்த படமும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement