என் பையன் தான் யூடியூபில் வீடியோவை காட்டினான். மேடையில் பேசிய கருணாஸுக்கு வீட்டில் கிரேஸ் கொடுத்த பதிலடி.

0
8307
Karunas-wife
- Advertisement -

நடிகர் கருணாஸ் தன்னுடைய இயல்பான நகைச்சுவை பேச்சால் தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் இசை அரசியல் வாதியும் ஆவர். மேலும்,நடிகர் கருணாஸ் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் சினிமாவில் முதலில் காமெடியனாக நடிக்கவில்லை. இவர் சினிமாவில் பாட்டு படுவதன் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். பின் இவர் தமிழ் சினிமா திரை உலகில் 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர்.

-விளம்பரம்-

இந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். அதோடு சினிமாவில் பல பாடல்களும் பாடி உள்ளார். கருணாஸ் மனைவி பெயர் கிரேஸ். கிரேஸ் அவர்களும் திரைப்பட பின்னணி பாடகி ஆவார். இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், இவர் பாடல்கள் மற்றும் கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை.

- Advertisement -

கிரேஸ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து உள்ளார். அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்கள் எல்லாம் பேசி இருந்தார். அப்போது கருணாஸ் மேடை ஒன்றில் நான் எல்லாம் ஒரு லட்ச ரூபாய்க்கு சரக்கு சாப்பிடுவோம் என்றுகூறி இருந்தாரே அது பற்றி கூறுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கிரேஸ் அவர்கள் கூறியது, அவரது சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்ணுவேன் என சொல்லும்போது எனக்கு ஷாக்காக தான் இருந்தது. அந்த விடியோவை என் பையன் யூடியூபில் எனக்கு காட்டினான். பின்னர் அவர் வீட்டிற்கு வந்ததும் ‘உங்கள வச்சு நல்ல செய்யப் போறாங்கன்னு, வாழ்த்துக்கள்’ என்று சொல்லிட்டேன்.

Image result for karunas and wife

-விளம்பரம்-

ஏன் இப்படி பேசனிங்கனு கேட்டதற்கு அவர், என் மனசுல என்ன தோணுதோ அத தான் நான் சொன்னேன். அதுக்காக என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று சொன்னார். பின்னர் நான் அவருக்கு கை கொடுத்துவிட்டு உஷாராக இருந்துக்கோ என்று கூறிவிட்டேன் என கிரேஸ்கூறியுள்ளார். தற்போது கிரேஸ் விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்து வருகிறார். மேலும், இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென் ஆகும். அதோடு கருணாஸ் மகன் கென் தனுஷ் நடிப்பில் வந்த “அசுரன்” படத்தில் நடித்து உள்ளார்.

Advertisement