கருப்பு சுப்பையா என்ன ஆனார் தெரியுமா ? விவரம் உள்ளே

0
3124
Karuppu--subbiah

80களில் மற்றும் 90களில் கவுண்டமணி உடன் செந்தில் சேர்ந்தால்தான் காமெடி கலைகட்டும். ஆனால், செந்திலுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு கவுண்டமணியுடன் ஒருவர் நடித்திருக்கிறார். காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இவரும் காமெடியில் அசத்தியுள்ளார். அவர் பெயர் தான் கருப்பு சுப்பையா.

Actor-Karuppu--subbiah

அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர். அதில் இவர் கருப்பாக இருந்ததால் இவருக்கு கருப்பு சுப்பையா என பெயர் வந்தது. இவர் மதுரையில் உள்ள திருமங்கலம் ஊரை சேர்ந்தவர்.

கவுண்டமணியும் இவரும் சேர்ந்த கிட்டத்தட்ட 80 படங்களில் நடித்துளனர். ஆரம்ப காலத்தில் பழனிச்சாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு காளை, கட்டபொம்மன், செந்தூர பூவே, பட்டத்துராணி உள்ளிட்ட படங்களில் மெயின் ரோலில் நடித்தார்.

Karuppu--subbiah actor

அதிலும், ஜல்லிக்கட்டு காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் என்னும் கேரக்டர், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கேரக்டர், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அறுவை செய்யும் கேரக்டர் ஆகியவை மிகவும் பிரபலம் ஆனவை.

Karuppu--subbiah-comedy-actor

கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் கூட ரசிக்கும் வண்ணம் இருக்கும். கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. மேலும், கவனிக்க ஆள இல்லாமமலும் போனதால் மிகவும் மனமுடைந்து போனார் கருப்பு சுப்பையா. இதனால் கடந்த 2013ஆம் ஆண்டு கேட்க ஆளின்றி நோய்வாய்ப்பட்டு பரிதாபமாக இறந்து போனார் சுப்பையா.