துணை இயக்குனரை அறைந்து சர்ச்சையில் சிக்கிய கருப்பசாமி குத்தைகைதாரர் பட நடிகை. இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

0
3203
meenatchi
- Advertisement -

கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மீனாட்சி. இவரது உண்மையான பெயர் பிங்கி சர்க்கார். இவர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 1988ஆம் ஆண்டு பிறந்தவர்.அதன்பின்னர் 2009ஆம் ஆண்டு TN 07 AL 4777 என்ற தமிழ் படத்தில் நடித்தார். விஷாலின் தோரணை படத்தில் கெஸ்ட் ரோலிலும், ராஜாதி ராஜா படத்தில் லாரான்சுக்கு ஹீரோயினாகவும் நடித்தார்.

-விளம்பரம்-

கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் குடும்ப குத்து விளக்காக நடித்த மீனாட்சி அடுத்தடுத்து படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காட்டி நடித்து வந்தார். தமிழில்,கருப்பசாமி குத்தகைதாரர்,TN 07 AL 4777,ராஜாதி ராஜா,மந்திர புன்னகை,அகம் புறம், இந்த படங்களில் நடித்த பிறகு வந்த வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எம்.பி.ஏ படிக்க சென்றுவிட்டார் மீனாட்சி.

- Advertisement -

இவர் 2015 ஆம் ஆண்டு நேர் முகம் என்ற படத்தில் நடித்துவந்த போது இந்த படத்தின் படப்பிடிப்பில் சர்ச்சையில் சிக்கி இருந்தார் மீனாட்சி. அது என்னவெனில் படத்தின் துணை இயக்குநர் ஷங்கர் தன் நண்பர்களுடன் கை காட்டி பேசி கொண்டிருப்பதை பார்த்து, தன்னை தான் கிண்டல் செய்கிறார் என நினைத்த மீனாட்சி, சங்கரை ஓங்கி பளார் என்று அறைந்து விட்டார். இதனை பார்த்த படக்குழு மீனாட்சியை கேரவனில் அடைத்து வைத்துவிட்டு, சங்கரிடம் மன்னிய கேக்க சொல்லியுள்ளனர்.

பின்னர் சில மணி நேரம் கழித்து வேனில் உட்கார்ந்த படியே மன்னிப்பு கடிதம் எழுதி சங்கரிடம் கொடுத்துள்ளார் மீனாட்சி. இதனால் அந்த சர்ச்சை ஓய்ந்து மீண்டும் சூட்டிங் துவங்கி உள்ளது. அந்த சர்ச்சைக்கு பின்னர் மீனாட்சி வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இந்த நிலையில் மீனாட்சியின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் முன்பை விட போசு பொசுவெனு தோற்றத்தில் இருக்கிறார் மீனாட்சி.

-விளம்பரம்-
Advertisement