சினிமாவை வெறுத்த கருத்தம்மா ராஜாவின் இன்றைய நிலை என்ன தெரியுமா !

0
4595

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு கொடுத்த ஹீரோக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படி பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு ஹீரோ தான் நடிகர் ராஜா டகுபாட்டி. 80களின் ஆரம்பத்தில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு ஆரம்பமே அமர்க்களமாக தான் இருந்தது.
பாரதிராஜாவால் அறிமுகப்படத்தப்பட்டாலே பெரிய ஹீரோவாக ஆகிவிடலாம் என்ற காலகட்டம் அது. அப்பொடி தான் ‘கருத்தம்மா’ படத்தில் அறிமுகமான ராஜாவிற்கு படம் ஹிட் ஆனதும் பெருத்த வரவேற்பு கிடைத்தது. வசீகரமான முகம், ஆளை மயக்கும் சிரிப்பு, நல்ல உயரம், சரியான நடிப்பு திறமை என அனைத்தும் இவரை ஹீரோவாக நக்களிடம் கொண்டு சேர்த்தன.

இதையும் படிங்க: அதிரடியாக நீக்கப்பட்டார் சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் ! வீடியோ உள்ளே

அன்றைய கல்லூரி மாணவர்கள், பெண்கள் என இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவரை காதலிக்க சொல்லி பல காதல் கடிதங்கள் இவர் வீட்டில் குவிந்திருக்கும். அப்படி இருந்தவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
பின்னர் இவருக்கு போட்டியாக மிக இளம் நடிகர்கள் விஜய், அஜித், பிரசாந்த என பலரும் வர, இவர் துணை நடிகராக ஓரம் கட்டப்பட்டார். சினிமாவின் தன்மையை உணராத இவர் ஓரம்கட்டப்பட்டதால் சினிமாவை வெறுக்க துவங்கினர். பின்னர், தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து கிரானைட் தொழில் ஆரம்பித்தார். தற்போது அந்த தொழில் கோடி கட்டிப்பறக்கும் ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார்.