சுசித்ரா இரண்டாவது கல்யாணம் என்ன ஆச்சி தெரியுமா? கஸ்தூரி வெளியிட்ட உண்மைகள்.

0
432
- Advertisement -

கடந்த சில வாரங்களாகவே சுசித்ரா-கார்த்திக் குமார் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகியாக திகழ்பவர் சுசித்ரா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தென்னிந்திய சினிமாவில் பாடகியாக பயணித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகர் கார்த்திக் குமாரை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் 12 ஆண்டுகள் ஒன்றாக தான் வாழ்ந்து வந்தார்கள். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் சில ஆண்டுகளாகவே நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத், சஞ்சித் செட்டி போன்ற பல பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை “சுச்சி லீக்ஸ்” என்ற பெயரில் வெளியாக்கி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இது குறித்து பலருமே விமர்சித்து இருந்தார்கள். இருந்தாலும், தன் தரப்பு நியாயத்தை சுசித்ரா கூறியிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாடகி சுசித்ரா, என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பணத்தைக் கொடுத்து என்னை பற்றி தவறாக சித்தரித்து வருகிறார். அவரும் தனுஷும் சேர்ந்து குடித்து விட்டு ஒரு அறைக்குள் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த அறைக்குள் அவர்கள் சென்றால் என்ன செய்வார்கள்? என்று எனக்கு தெரியும். அதேபோல் எனக்கு திருமணமாகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரிந்தது என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சுசித்ரா-கார்த்திக்குமார் சர்ச்சை:

இதை பார்த்த நடிகர் கார்த்திக் குமார், இல்லை என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டு கூறியிருக்கிறார்.
இதை அடுத்து சுசித்ரா அவர்கள் கார்த்திக் பேசிய ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், நீ அசிங்கமா பேசுற. இதெல்லாம் படித்தவர்கள் பேசுற மாதிரி இல்ல. படிக்காத பட்டியலின பெண்கள் பேசுற மாதிரி இருக்கு. பற,பள்ள முண்டங்கள் தான் இப்படியெல்லாம் பேசும் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி கார்த்தி பேசியிருந்த வீடியோ இணையத்தில் வெளியானது தொடர்ந்து பலருமே விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

கார்த்தி மீது புகார்:

இதை அடுத்து கார்த்திக், நான் அப்படி பேசவில்லை. இது என்னுடைய குரலும் இல்லை என்று கூறியிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பிரபலங்கள் பலருமே சுசித்ராவின் குற்றச்சாட்டு தொடர்பாக பேட்டி கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், எல்லா மீடியாவும் சுசித்ரா பக்கம் தான் திரும்பி இருக்கிறது. அவருக்கு இப்போது மருத்துவ உதவி அல்லது மனநல உதவி தான் தேவை. அவர் அந்தளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இப்போது சோசியல் மீடியா, நீதிமன்றம், போலீஸ் எல்லாம் தேவை இல்லை.

-விளம்பரம்-

கஸ்தூரி பேட்டி:

நான் இப்படி சொல்வதன் மூலம் அவர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்று கூறவில்லை. அந்தளவிற்கு அவர் காயப்பட்டு இருக்கிறார் என்று சொல்கிறேன். அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அன்பான, ஆறுதலான துணை இல்லை என்று ரொம்ப வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தான் இவர் மீடியாவில் பேசிக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முன்பே சுசித்ராவின் அப்பா, அம்மா தற்கொலை செய்து கொண்டார்கள். ஏற்கனவே அவர்களுடைய குடும்பத்தில் ஒரு பிரச்சனை இருந்தது. அந்த பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சுசித்ரா ரொம்ப கஷ்டப்பட்டு இருந்தார்.

சுசித்ரா குறித்து சொன்னது:

கார்த்திக் குமார் குறித்து சுசித்ரா குற்றச்சாட்டுகள் எல்லாம் வைத்திருந்தார். நான் ஒருவர் சொல்வதை மட்டும் பேச முடியாது. இருவர் தரப்பும் விசாரித்தால் தான் என்னவென்று தெரியவரும். 13 வருடமாக இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து இருந்தார்கள். இவர்கள் என்ன புது தம்பதிகளா? ஒரு மாதம், இரண்டு மாதம் அமைதியாக இருப்பார்கள். 13 வருடமாக புரிந்து கொள்வதற்காக காத்துக் கொண்டிருப்பார்களா? எப்படி சுசித்ரா பொறுத்துக் கொண்டிருக்க முடியும். கார்த்திக் இன்னொரு திருமணம் செய்திருக்கிறார். அந்தப் பெண் அவருடன் சந்தோசமாக தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணும் பொய் சொல்கிறாரா? சுசித்ரா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையாமல் விவாகரத்து செய்து கொண்டார். இதைப் பற்றி பேசுவதற்கு எனக்கு தர்ம சங்கடமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement