தேர்தல் நெருங்கும் வேளையில் பிராமணர்கள் குறித்து பேசிய பெரியாரின் பேச்சை தற்போது பகிர்ந்த கஸ்தூரி

0
510
- Advertisement -

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நடிகை கஸ்தூரி வெளியிட்டு இருக்கும் தந்தை பெரியார் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்திகள் தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் குறித்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் திமுக கட்சியுடன் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இணைந்து இருக்கிறார். பின் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைந்து இருக்கிறார். இதை அடுத்து பாஜகவுடன் அன்புமணி ராமதாஸ் கட்சி கூட்டணி வைத்திருக்கிறது. இது தொடர்பாக அண்ணாமலை- அன்புமணி ராமதாஸ் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இப்படி பாஜகவுடன் சில அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்தும், தீவிரமாக ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்கள்.

- Advertisement -

கஸ்தூரி பதிவு:

மேலும், இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கஸ்தூரி அவர்கள் பெரியார் குறித்த பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், உற்சவம் நடத்துகிறோம். உற்சவம் என்றால் என்ன? உற்சவத்தை யார் கொண்டாடுகிறார்கள்? கடவுளை வேண்டுபவர், கடவுளை எதிர்ப்பவர்கள் தான் கொண்டாடுகிறார்கள். நாம் அவர்களை கொல்லலாமே. இது சட்டரீதியாக தப்புதான். இருந்தாலும் ஒரு நல்லது நடக்க செய்யலாம்.

தந்தை பெரியார் சொன்னது:

சாதி, மதம், கோயில் எல்லாத்தையும் அடித்து நொறுக்க வேண்டும். மதத்தை சொல்லிக் கொண்டு திரியும் தமிழ் பிராமணத்தை கொல்ல வேண்டும். நம்மிலும் பாதி பேர் இறப்பார்கள். நூறில் ஒரு ஆள் தமிழன் இறந்தால் மூன்று தமிழ் பிராமின்ஸ் இறப்பார்கள். தெய்வங்கள் கட்டிடங்களை சிலைகளை எல்லாம் அடித்து நொறுக்கினால் தான் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இதை அவர் 1973 ஆம் ஆண்டு காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

நெட்டிசன்கள் கருத்து:

தற்போது இந்த வீடியோவை தான் கஸ்தூரி இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இதற்கு காரணம், இவர் பிஜேபி கட்சியை விமர்சித்தும், எதிர்த்தும் தான் குரல் கொடுத்திருக்கிறார். இதற்கு சிலர் ஆதரவு கொடுத்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார்.

கஸ்தூரி திரைப்பயணம்:

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். சிறிய இடைவெளிக்கு பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதற்கு பிறகும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீப காலமாக இவர் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்.

Advertisement