சினிமா ஷூட்டிங்கில் பெண்களுக்கு அந்த இடத்தில் ஏன் அனுமதி இல்லை.! கஸ்தூரி காட்டம்.!

0
516
- Advertisement -

தமிழ் சினிமாவில் 90 ஸ் கால கட்டத்தில் கமல், சத்யராஜ், பிரபு என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்தவர் பிரபல நடிகர் கஸ்தூரி. தற்போது உள்ள இளம் ரசிகர்களுக்கும் இவர் பரிட்சயமான ஒருவர் தான் காரணம் அம்மணி அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது தான்.

-விளம்பரம்-

தற்போதும் படங்களில் நடித்து யாரும் கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் கூட எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். மேலும், அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

- Advertisement -

அதே போல சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பல்வேறு பாலியல் தொல்லை குறைத்தும் பேசி வருகிறார் கஸ்தூரி. இந்த நிலையில் சினிமா ஷூட்டிங்கில் பெண்களை சமமாக நடத்தபடுவதில்லை என்று ஆதங்கபட்டுள்ளார் கஸ்தூரி.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கஸ்தூரி,
“சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனரேட்டர் வாகனத்துக்குள் ஆண்கள் புழங்கலாம். உறங்கலாம். ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விடக்கூடாது… காரணம் தீட்டாம்.” தென்னிந்திய பட உலகில் பெண்கள் மீது வெறுப்பு காட்டுவதை நான் அடிக்கடி பேசிவருகிறேன். சினிமா வேனுக்குள் பெண்கள் நுழையக்கூடாதா? சினிமா ஒலி, ஒளி குழுவில் பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement