திருமணத்தில் நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடையின் விலை எவ்ளோ தெரியுமா.

0
1052
katreena
- Advertisement -

நடிகை கத்ரீனா கைஃப் திருமணத்திற்காக அணிந்திருந்த உடையின் விலை குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்பவர் கத்ரீனா கைஃப். இவர் ஹிந்தி மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், கத்ரீனா கைப்பும், விக்கி கவுசாலும் நீண்டகாலமாக காதலித்து வந்திருக்கிறார்கள். பின் அனைவரும் எதிர்பார்த்திருந்த இவருடைய திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

-விளம்பரம்-
Vicky Kaushal Katrina Kaif Marriage Live Updates: Six Senses Fort decked up  for Vicky Kaushal-Katrina Kaif wedding

பல விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் நடந்து முடிந்தது. அதுமட்டும் இல்லாமல் இவர்களுடைய திருமணத்தை படம் பிடித்து ஒளிபரப்ப பிரபல நிறுவனத்திடம் 80 கோடி ரூபாயில் விலை பேசி இருந்தார்கள். கத்ரீனாவின் திருமணத்திற்கு ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் கத்ரீனாவின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

மேலும், இவர்கள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து கொண்டாடும் நிகழ்வுகளின் புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், திருமணத்திற்காக நடிகை கத்ரீனா கைஃப் அணிந்திருந்த உடை விலை மட்டுமே 17 லட்சம் என்று கூறப்படுகிறது.

அந்த அளவிற்கு திருமணத்திற்காக அந்த உடையில் டிசைன் செய்து கொண்டு வரப்பட்டதாம். அதேபோல் கத்ரீனாவுக்காக ஸ்பெஷலாக Sojat மெஹந்தி போட்டார்கள். இது ஜோத்பூரில் உள்ள பாலி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டது. இந்த மெகந்தி இயற்கையான முறையில் உருவாக்கபடுவதாகவும், இதில் எந்த கெமிக்கல் கலக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மெஹந்தியின் விலை ஒரு லட்சம் ரூபாய்.

-விளம்பரம்-
Advertisement