இயக்குனர் டிகே இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் காட்டேரி. இவர் ஏற்கனவே யாமிருக்க பயமேன் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வைபவ், ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காமெடி- திகில் – திரில்லர் பாணியில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.என். பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு பி எஸ் வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள காட்டேரி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் நைனா என்னும் டான் இருக்கிறார். அவரிடம் கூட்டாளி ஒருவன் தன்னுடைய நண்பர்களை சிக்க வைத்துவிட்டு தங்கப் புதையலை தேடி செல்கிறார். அவனை கண்டுபிடிப்பதற்காக கதாநாயகன் வைபவ் தன்னுடைய நண்பர்கள் மற்றும் மனைவியுடன் செல்கிறார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிராமத்தை சென்றடைகிறார்கள்.வைபவ் அந்த கிராமத்தில் இருக்கும் வீட்டில் தன்னுடைய கூட்டாளி புகைப்படத்தை காட்டி விசாரிக்கிறார்கள்.

Advertisement

இதையும் பாருங்க : திருமணமாகி குழந்தை இருப்பவரை திருமணம் செய்ததால் ஏற்பட்ட பிரச்சனை – பிக் பாஸ் மமதி தற்போதைய நிலை இதான்.

அப்போதுதான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர் தேடி வந்த கிராமத்தில் அனைவருமே இறந்துபோய் பேயாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வருகிறது. இதன் பின் வைபவ் எப்படியாவது இந்த கிராமத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று முயற்சி செய்கிறார். ஆனால், அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருக்கிறது. இந்த கிராமத்தை விட்டு வெளியேற நினைத்தால் மீண்டும் அதே கிராமத்திற்கு வருகிறார்கள்.

Advertisement

அவரை சுற்றி பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. இறுதியில் வைபவ் தன் நண்பர்கள் மற்றும் மனைவியுடன் அந்த கிராமத்தில் இருந்து தப்பித்தாரா? இல்லையா? புதையல் கிடைத்ததா? கூட்டாளியை வைபவ் கண்டுபிடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் காமெடி, திகில் என அனைத்திலும் வைபவ் சுமாராக நடித்திருக்கிறார். கதாநாயகியாக வரும் சோனம் பஜ்வா மற்றும் ஆத்மிகா இருவரும் பெரிதாக திரையில் காண்பிக்க வில்லை.

Advertisement

இருந்தாலும் அவர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். காமெடியனாக வரும் கருணாகரன், ரவி மரியா, குட்டி கோபியின் நகைச்சுவை படத்திற்கு செட்டாகவில்லை என்று தான் சொல்லணும். படத்தில் பேயாக வரும் வரலட்சுமியின் நடிப்பு பார்ப்பவர்களை சலிப்பு தட்டுகிறது. மற்றபடி படத்தில் வரும் பிற நடிகர்களின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படவில்லை. யாமிருக்க பயமேன் எனும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் டீகே காட்டேரி படத்தில் சொதப்பி விட்டார் என்றுதான் சொல்லணும்.

நகைச்சுவை- திகில் என இரண்டுமே இந்த படத்தில் ஈடுபடவில்லை. இதுவே படத்திற்கு மைனஸ் ஆக அமைந்துள்ளது. பலமுறை பார்த்த கதை என்பதால் சலிப்பு தட்டி இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தை பார்த்துவிட்டு பேயே தயவுசெய்து இந்த மாதிரி படம் எடுக்காதீர்கள் என்று சொல்லும் அளவிற்கு கதை உள்ளது. மியூசிக்கும் ஓரளவு கை கொடுத்திருக்கிறது. ஆனால், எடிட்டிங் சொல்லும் அளவிற்கு இல்லை. ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மற்றபடி காசு கொடுத்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

நிறைகள் :

ஒளிப்பதிவு சிறப்பு

வைபவ் நடிப்பு ஓகே

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவுமில்லை

குறைகள் :

இயக்கம், திரைக்கதை சொதப்பல்.

நகைச்சுவை சுத்தமாக செட்டாகவில்லை.

படம் பார்ப்போரை சலிப்பு தட்டி இருக்கிறது.

திகில் காட்சிகள் ஒன்றும் ஒர்க்அவுட் ஆகவில்லை.

நடிகர்களின் நடிப்பும் பெரிதாக பேசப்படவில்லை.

மொத்தத்தில் காட்டேரி – பெரிய சொதப்பல் என்று சொல்லலாம்

Advertisement