‘சமூகத்தை கெடுக்கக்கூடாது’ – பாடல் எழுதுவதில் இந்த மூன்று விதிகளை கடைபிடிக்கிறேன். கவிஞர் தாமரை சொன்ன விஷயம்.

0
612
Thamarai
- Advertisement -

இனி சினிமா உலகில் பாடல் எழுத மூன்று நிபந்தனைகள் வைத்திருக்கிறேன் என்று பாடலாசிரியர் தாமரை வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடலாசிரியராக திகழ்பவர் தாமரை. இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இவர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இருந்தாலும், இவருக்கு கவிதை மற்றும் இலக்கியத்தின் மீது தான் தீராத காதல் கொண்டவர்.

-விளம்பரம்-

மேலும்,இதன் காரணமாகவே தாமரை சென்னைக்கு குடியேறினார். பின் அவர் தன்னுடைய கட்டுரைகள் மற்றும் கவிதைகளை எழுதத் தொடங்கினார் . பின் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடைய இனியவளே என்ற படத்தில் தாமரைக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் படங்களில் பாடலை எழுதி வந்தார்.

- Advertisement -

தாமரை இசைப்பயணம்:

அதிலும், கௌதமேனன் இயக்கத்தில் ஹாரிஸ் இசையில் வெளியாகியிருந்த மின்னலே திரைப்படத்தில் வசீகரா என்ற பாடலை எழுதினார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் இடத்தை பிடித்திருந்தது. அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் போன்ற தொடர்ந்து பிளாக் பாஸ்டர் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்திருந்தார் தாமரை. மேலும்,இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் பாடல்களை எழுதி வந்தார்.

மூன்று நிபந்தனைகள்:

இவர் எழுதிய அழகிய ஆசூரா, மலர்களே மலர்களே, ஒன்றா இரண்டா ஆசைகள், மன்னிப்பாயா, முன்தினம் பார்த்தேனே, யார் அழைத்தது போன்ற பாடல்கள் எல்லாம் இளைஞர்கள் மனதை கவர்ந்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக பாடல்களை எழுதி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தாமரை அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் பாடல் எழுதுவது குறித்து கூறியிருந்தது, பாடல்களில் தேவையில்லாத ஆங்கில வார்த்தைகளில் சேர்க்க மாட்டேன். ஆபாச வார்த்தைகளை சேர்க்க மாட்டேன். இரட்டை அர்த்தம் வரும் அர்த்தம் வரும் வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன். இதுவே என்னுடைய மூன்று நிபந்தனைகள்.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் என்னுடைய அனுமதி இல்லாமல் பல பாடல்களின் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கின்றது. ஆனால், காலப்போக்கில் என்னை புரிந்துகொண்டவர்கள் பாடல் சூழ்நிலைகளோடு என்னை தேடி வந்தார்கள். இந்த சமூகத்தை திருத்துகிறேனோ? இல்லையோ? கெடுக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மேலும், போதைப் பொருள்களை தூக்கி பிடிக்கும் பாடல்களுக்கு என்னிடம் இடம் இல்லை என்று கூறி இருந்தார். இப்படி பாடலாசிரியர் தாமரை கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.

Advertisement