ஆண்களுக்கு நிகராக கயல் ஆனந்தி செய்த செயல்! வாய்ப்பிளந்த ரசிகர்கள்.! போட்டோ இதோ

0
591
Anandhi

தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்த இவர் முதன் முதலில் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற பதில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. அந்த படத்திற்கு பின்னர் “த்ரிஷா இல்லனா நயன்தாரா”, ”எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது நடிகை ஆனந்தி “அலாவுதீனின் அற்புத கேமரா” என்று புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை “மூடர் கூடம்” படத்தை இயக்கிய இயக்குனர் நவீன் இயக்கி அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார் . ஒயிட் ஷேடோஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது ஐரோப்பாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ஆனந்தி அங்கு ஆண்கள் ஓட்டும் அதிவேக ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்றை ஒட்டியுள்ளாராம். அவர் பைக் ஒட்டிய புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் நவீன் “ஐரோப்பா நாட்டு விதிமுறைகளுக்கு ஏற்ப சரியாக பைக் ஒட்டி அபராதம் என்ற விஷயத்தில் இருந்து என்னை காப்பாற்றிவிட்டார் ” என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.